பத்திரிகையாளருக்கு மைதானத்திற்குள் அனுமதி மறுப்பு Twitter
உலகம்

FIFA WC: மைதானத்திற்குள் பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு; LGBTQ டிஷர்டால் சர்ச்சை?

Keerthanaa R

LGBTQ சமூகத்தை ஆதரிக்கும் விதத்தில் உடை அணிந்திருந்ததாக கூறி ஃபிஃபா கால்பந்து போட்டியை காண அமெரிக்க பத்திரிகையாளருருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை நடக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்தும் மொத்தம் 32 நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்கின்றன. 2022ம் ஆண்டு உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் 2010ம் ஆண்டு பெற்றது.

இன்று வரை கத்தாரில் ஓரினச் சேர்க்கையாளர்கள் விஷயத்தில் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளையே முன்வைத்து வருகின்றனர். கத்தாரில் தன் பாலினத்தவர் உறவுகள் சட்ட விரோதமானதாகும். மீறி தன் பாலினத்தவர்கள் உறவில் இருந்தால், அபராதம் முதல் மரண தண்டனை வரை அந்நாட்டு அரசு அவர்களுக்கு வழங்குகிறது.

LGBTQ சமூகத்திற்கு ஆதரவாக உலகளவில் உள்ள இயக்கங்கள் கத்தாருக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றன. மேலும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், இந்த விவகாரத்தில் அவர்களது எதிர்ப்பை காட்ட, அணி ஆடையில் ஒன் லவ் என்ற பெயரில், அனைத்து விதமான உறவுகளையும் ஏற்றுக்கொள்ளும் வானவில் சின்னத்தை கொண்ட ஆர்ம் பேண்டை அணிய முடிவெடுத்தனர்.

டென்மார்க் அணி தமது எதிர்ப்பைக் காட்டும் வகையில், நாடு மற்றும் பிராண்ட் லோகோ தெளிவாகத் தெரியாத வகையில் ஆடை அணிய உள்ளது.

ஆனால், ஃபிஃபா நிர்வாகம், கால்பந்து வீரர்கள் அந்த ஆர்ம் பேண்டை அணியக்கூடாது எனவும், அணிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. இதையடுத்து இந்த ஆர்ம் பேண்டை அணியும் முடிவை வீரர்கள் கைவிட்டனர். இது ஒரு புறம் சர்ச்சையாகியுள்ள நிலையில், வானவில் டிசைன் கொண்ட டி ஷர்ட் அணிந்து வந்ததற்காக பத்திரிகையாளர் ஒருவருக்கு மைதானத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபுட்பால் பத்திரிகையாளரான கிராண்ட் வால் என்பவர் அமெரிக்கா - வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை காண வந்துள்ளார். அப்போது அவர் LGBTQ சமூகத்தினை ஆதரிக்கும் வகையில் டிஷர்ட் அணிந்திருந்ததாக கூறி, அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர் மைதானத்திற்குள் செல்ல தடை விதித்துள்ளனர். அவர் தன் உடையை மாற்றி வந்தால் தான் உள்ளே அனுமதிப்போம், இல்லையெனில் உள்ளே செல்ல விடமாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பத்திரிகையாளரின் கையிலிருந்தும் வலுக்கட்டாயமாக அவரது ஃபோனை பறித்ததுடன், மற்றொரு அதிகாரி, ”நீங்கள் உங்கள் உடையை கழற்றிவிட்டால் கூட போதும்” என தெரிவித்ததாக வால் கூறினார்.

சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிய பிறகு வால் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அவர் அணிந்திருந்த டி ஷர்ட்டை பார்த்து, அது தன் பாலினத்தவர்களை ஆதரிக்கும் உடை என தவறாக புரிந்துகொண்டதாக வால் மற்றொரு ட்வீட்டில் கூறியிருந்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?