உலக கோப்பைக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை பலி வாங்கிய அரபு தேசம்!  canva
உலகம்

கத்தார் : உலக கோப்பைக்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை பலி வாங்கிய அரபு தேசம்!

உரிமையை பெற்றது முதலே பல சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொண்டது பாலைவன நாடு. அவற்றில் முக்கிய பிரச்னை, உலகக்கோப்பை தயாரிப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் நிலை, மற்றும் இறப்பு.

Keerthanaa R

ஃபிஃபா உலகக்கோப்பைக்கான தயாரிப்பு பணிகளின் போது அதில் ஈடுபடுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், சுமார் 400 பேருக்கும் மேல் உயிரிழந்ததாக ஃபிஃபா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தலைவரும், டெலிவரி மற்றும் லெகசி உயர் குழுவின் பொது செயலாளருமான ஹசன் அல்- தவாடி, பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கனுடனான நேர்காணல் ஒன்றில் இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

ஆனால், இறப்பு எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை எனக் கூறியுள்ள ஹசன், 400 முதல் 500 தொழிலாளர்கள் வரை இறந்திருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தார். இது பற்றிய விவாதங்கள் இன்னும் முடிவுக்கு வராததால் துல்லியமான எண்ணிக்கையை அவர் தெரிவிக்கவில்லை.

ஒரு மரணம் என்றாலும், அது பெரியது தான் என்று கூறிய ஹசன், ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரம் நாட்டில் மேம்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குறைந்தபட்சம் அவர்கள் பொறுப்பில் இருக்கும் இடங்களின் பாதுகாப்பை அவர்கள் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்காக தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

கத்தார் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரை நடத்த கடந்த 2010ல் உரிமத்தை பெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து 32 நாடுகள் உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன.

உரிமையை பெற்றது முதலே பல சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொண்டது பாலைவன நாடு. அவற்றில் முக்கிய பிரச்னை, உலகக்கோப்பை தயாரிப்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் நிலை மற்றும் இறப்பு.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து சுமார் 30,000 புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு பணியமர்த்தப்பட்டனர்.

இவர்களில் 6000த்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த பணிகளின் போது உயிரிழந்ததாக 2021ல் வெளியான தி கார்டியன் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளுக்காக ஒரு புத்தம் புதிய நகரத்தையே உருவாக்கியது இந்த எண்ணை தேசம். புதிய மைதானங்கள், வெப்பத்தை குறைக்க புதிய தொழில்நுட்பங்கள் என அனைத்து வசதிகளையும் கத்தார் அரசு மேற்கொண்டது.

ஆனால் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றும் வசதிகளை செய்துகொடுக்கவில்லை.

2014 முதல் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகளின் போது 3 மரணங்கள் மட்டுமே நடந்ததாகவும், மற்ற 37 மரணங்கள் பணி சாரா மரணங்கள் எனவும் தான் தற்போது வரை இந்த குழு கூறிவருகிறது.

ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படும் இந்த தரவு உயர் குழுவின் பொதுஅறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டது. உயர்குழுவின் கீழ் வரும் 8 மைதானங்கள், போட்டிகள் நடத்தப்படாத 17 இடங்கள் மற்றும் பிற இடங்களின் விவரங்கள் இந்த பொது அறிக்கையில் சமர்ப்பிக்கப்படும்.

இதை தவிர 2014 முதல் 2020 வரை எல்லா துறைகளிலும், எந்தெந்த நாட்டவர்கள் மரணித்தனர் என்பது குறித்த தரவுகள், தனியாக கணக்கிடப்பட்டு வருவதாக கடந்த செவ்வாயன்று உயர் குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

கத்தாரில் உலகக்கோப்பை பணிகள் தொடங்கியதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

ஃபிஃபா அதிகாரி வெளியிட்டுள்ள இந்த தரவுகள், தி கார்டியன் செய்தி தளம் குறிப்பிட்டதற்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மெக்கீஹன் என்ற சமூக ஆர்வலர் கூறுகையில், “உலகக்கோப்பையை நடத்த கத்தார் உரிமத்தை பெற்றதனால், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

இவற்றை தவிர, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான இவர்களது பிரச்சாரத்தால் உலக நாடுகளின் எதிர்ப்பை கத்தார் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?