Stephen Hawking Twitter
உலகம்

ஏலியன் தொடர்பு டூ காலநிலை மாற்றம் - Stephen Hawking கணித்த 5 அறிவியல் உண்மைகள்

1988ஆம் ஆண்டு ஸ்டீஃபன் ஹாகிங் எழுதி வெளியான A Brief History of Time புத்தகம், இன்றும் அறிவியல் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. கருந்துளை, பிக் பேங் என இவர் தொடாத சிக்கலான தலைப்புகள் இல்லை எனலாம்.

Gautham

ஸ்டீஃபன் ஹாகிங், உலகின் சிறந்த இயற்பியலாளர், வானியல் அறிஞர், அறிவியல் பேராசிரியராக அவர் அறியப்படுகிறார்.

மோடார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீஃபன் ஹாகிங்கால் ஒரு சாதாரண மனிதர் போல கை கால்களைப் பயன்படுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் இந்த பேரண்டத்திலுள்ள பல ரகசியங்களை, கோட்பாடுகளை, அறிவியல்பூர்வமான கருத்துகளை... அவரது மூளைதான் நமக்குப் படமிட்டுக் காட்டியது, மேலும் காட்டிக் கொண்டிருக்கிறது.

1988ஆம் ஆண்டு ஸ்டீஃபன் ஹாகிங் எழுதி வெளியான A Brief History of Time புத்தகம், இன்றும் அறிவியல் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. கருந்துளை, பிக் பேங் என இவர் தொடாத சிக்கலான தலைப்புகள் இல்லை எனலாம்.

One Year of Newssensetn

அறிவியலையும், அறிவையும் மட்டுமே நம்பிய இந்த மாமனிதர் ஒரு நாத்திகராக தன்னை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டவர்.

உலகமே போற்றிக் கொண்டாடிய அறிவியல் விஞ்ஞானிகளில் ஒருவராக சில ஆண்டுகள் முன்பு வரை நம்மோடு வாழ்ந்த பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாகிங் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.

இவர் காலமாவதற்கு முன், பல மேடைகளில் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் சார்ந்த கணிப்புகளைக் கூறியுள்ளார். அவற்றைத் தான் இங்கு தொகுத்திருக்கிறோம்.

Gene editing

1. மரபணு தொகுத்தல் மற்றும் மாற்றியமைத்தல் (Gene editing)

ஒரு வாழும் உயிரினத்தில் உள்ள மரபணுவின் டி என் ஏ வரிசைகிரமத்தை நீக்குவது, சேர்ப்பது, மாற்றுவது போன்ற விஷயத்தை தான் ஜீன் எடிட்டிங் என்கிறார்கள்.

இதை நாம் பல சினிமாக்களில் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தேவையானது போல ஒருவரின் மரபணுவை மாற்றியமைத்துக் கொண்டு சூப்பர் ஹியூமன்ஸ்கள் உருவாவார்கள் என பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாகிங் "Brief Answers to the Big Questions" என்கிற தலைப்பில், அவர் காலமான பிறகு வெளியான கட்டுரை தொகுப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் என்கிறது தி கார்டியன் பத்திரிகை. இது வரலாறு காணாத அளவுக்கு வருங்காலத்தில் உச்சத்தைத் தொடும் என்றும் கூறியுள்ளார் அவர்.

artificial intelligence

2. செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence)

மனிதர்கள் மற்றும் மனித மூளைகள் மட்டுமே செய்யக் கூடிய விஷயங்களை கணினிகளும் கணினி அமைப்புகளும் செய்வது தொடர்பான கோட்பாடுகள் மற்றும் மேம்பாட்டைத் தான் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ், தமிழில் செயற்கை நுண்ணறிவு என்கிறோம்.

ஒருவர் பேசுவதைக் கண்டுபிடிப்பது, இருக்கும் தேர்வுகளில் எதைத் தேர்வு செய்தால் நல்லது என தீர்மானிப்பது, ஒரு விஷயத்தை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுவது போன்றவைகள் செயற்கை நுண்னறிவுக்கு சில உதாரணமாகக் கூறலாம்.

செயற்கை நுண்ணறிவு என்கிற ஜீனி பூதம் ஜாடியில் இருந்து வெளியே வந்துவிட்டது. இது ஒரு புதிய விஷயத்துக்கு உயிர் கொடுக்கும், அந்த விஷயம் மனிதர்களை மிஞ்சி செயல்படும் என தன் அச்சத்தை கடந்த 2017ஆம் ஆண்டு "வொயர்ட்" என்கிற பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் கூறி இருந்தார் பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாகிங்.

Space

3. விண்வெளி ஆராய்ச்சி (Space exploration)

ஏற்கனவே உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க், மனித இனத்தை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவேன் என கூறிக் கொண்டிருக்கிறார். செவ்வாயில் நீர் நிலைகளை உருவாக்க அதன் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும் என அறிவியல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார். அக்கருத்தை அப்படியே வழிமொழியவில்லை என்றாலும், பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மனித இனம் வேறு கோள்களில் குடிபெயர்வது குறித்து பேசியுள்ளார்.

மனித இனம் என்கிற ஒன்று செழித்து வாழ, சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்கள் தொடங்கி மற்ற சூரிய குடும்பங்களிலும் குடியேற வேண்டும் என கூறியுள்ளார் ஸ்டீஃபன் ஹாகிங். இப்படி பூமிப் பந்தை விட்டு பரவிச் செல்வது மட்டுமே நம்மை நம்மிடமிருந்து காப்பாற்றும். நாம் உலகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என நம்புகிறேன் என நார்வெயின் சயின்ஸ் & ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் என்கிற கூட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு கூறினார் ஸ்டீஃபன் ஹாகிங்.

4. காலநிலை மாற்றம் (Climate change)

உலகின் தட்பவெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், இந்த பிரச்னையை சமாளிக்க கரியமில வாயுக்கள், பசுமையில்ல வாயுக்கள் வெளியீட்டை கணிசமாகக் குறைக்க வேண்டும் என சர்வதேச சமூகத்தில் ஒரு சாரார் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்போ, தன் நாட்டின் வளர்ச்சி, சொந்த பொருளாதாரம் என நினைத்து செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் இத்தாலி நாட்டில் நடந்த சி ஓ பி 27 என்கிற காலநிலை மாற்ற கூட்டம் நடந்து முடிந்தது கூட நம்மில் பலருக்கு தெரியுமா என்பதை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாகிங் காலநிலை மாற்றம் குறித்த தன் கவலையை அவர் காலமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே தெரியப்படுத்தினார்.

trump

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட 2016 தேர்தலில், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று கூறினார் அப்போதைய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த டொனால்ட் டிரம்ப். அவர் சொன்னபடியே 2020 காலகட்டத்தில் அதிகாரபூர்வமாக பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

டிரம்பின் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பூமியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும், வெள்ளி கோள் போல பூமி மாற வழிவகுக்கும். இப்படியே போனால் பூமியின் வெப்ப நிலை 250 டிகிரி செல்சியஸைத் தொடும், சல்ஃப்யூரிப் அமில மழை பெய்யும் என்று பிபிசி ஊடகத்திடம் கூறி இருந்தார் ஸ்டீஃபன் ஹாகிங்.

Aliens

5. ஏலியன் தொடர்பு (Alien contact)

ஏலியன்களோடு நாம் தொடர்பு கொள்ளலாமா என்கிற கேள்விக்கு, அதன் விளைவு நேர்மறையாக இல்லாமல் போகலாம் என்று கூறினார் ஸ்டீஃபன் ஹாகிங். ஏலியன்கள் நம்மைக் கண்டுபிடித்தால், அதன் விளைவு கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தது போலிருக்கும்.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது எப்படி பூர்வகுடி அமெரிக்கர்களுக்கு நேர்மறையாக அமையவில்லையோ, அப்படி மனித இனத்துக்கும் ஏலியன்களின் வருகை நல்ல விதமாக அமையாமல் போகலாம் என கடந்த 2010ஆம் ஆண்டு டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலுக்குக் கொடுத்த பேட்டியில் கூறி இருந்தார் ஸ்டீஃபன் ஹாகிங்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?