பூமியில் வாழ்ந்த பலவகை உயிரினங்களில் ஒன்று டைனோசர். இவை பூமியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல, இன்று வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 'டிராகன் ஆஃப் டெத்' எனப்படும் பறக்கும் வகை டைனோசரின் புதைப்படிமத்தை அர்ஜென்டினா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கிட்டதட்ட 30 அடி நீளம், அதாவது ஒரு பெரிய சைஸ் ஸ்கூல் பஸ் அளவிற்கு இருக்கும் என்று கூறியுள்ளனர்
டெரோசார் என்றழைக்கப்படும் இந்த வகை டைனோசர்கள் பறவைகளை இறையாக உண்டு வாழ்ந்தன. அர்ஜென்டினாவின் மேற்கு மென்டோசா மாகாணத்தில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் உள்ள தனடோஸ்டிராகோன் அமரு என்ற இடத்தில் அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அங்கிருந்த பாறைகளில் இந்த டெரோசாரின் தொல்லுயிர் எச்சம்(புதைப்படிவம்) கிடைத்துள்ளது. இவை 86 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த டெரோசாரின் மீதங்கள் படிந்துள்ளன. சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன் குறுங்கோள்கள் எனப்படும் பெரிய வகை கற்கள் பூமி மீது மோதியதில், கிட்டதட்ட 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல கோடி உயிரினங்கள் அழிந்து போய்விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதைப்படிவம், இதுவரை கண்டறியப்பட்ட டைனோசரின் புதைபடிவங்களில் மிகப் பெரியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust