CNN vs FoxNews NewsSense
உலகம்

ஃபாக்ஸ் vs சிஎன்என் : அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றை புரட்டிப் போட்ட ஓர் ஆய்வு

"பார்வையாளர்களின் நம்பிக்கைகள் மற்றும் அணுகுமுறைகளில் ஊடகங்களின் பங்கு - ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி பார்வையாளர்களுடன் ஒரு களப் பரிசோதனை" என்ற தலைப்பில் அமெரிக்காவில் ஒரு ஆய்வு செப்டம்பர் 2020 இல் நடந்து அதன் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

Govind

போலிச் செய்திகளை நம்புவர்களை மாற்ற முடியுமா என்பது ஒரு சவாலான கேள்வி. முயன்றால் முடியும் என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

"பார்வையாளர்களின் நம்பிக்கைகள் மற்றும் அணுகுமுறைகளில் ஊடகங்களின் பங்கு - ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி பார்வையாளர்களுடன் ஒரு களப் பரிசோதனை" என்ற தலைப்பில் அமெரிக்காவில் ஒரு ஆய்வு செப்டம்பர் 2020 இல் நடந்து அதன் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

763 பார்வையாளர்கள்

இந்த ஆய்விற்காக 763 பார்வையாளர்கள் பங்கேற்றனர். அதில் தோராயமாக 40% பேரை எடுத்து அதை சிகிச்சைக் குழு என்று பெயர் வைத்தனர். இந்த சிகிச்சைக் குழுவினர் வழக்கமாக ஃபாக்ஸ் தொலைக்காட்சி செய்திகளைப் பார்ப்பவர்கள். அவர்களுக்கு மணிக்கு 15 டாலர் பணம் கொடுத்து சிஎன்என் தொலைக்காட்சி செய்திகளை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் வாரம் ஏழு மணிநேரம் சிஎன்என் தொலைக்காட்சியை பார்க்க வேண்டும். மற்ற நேரங்களில் அவர்கள் விருப்பப் பட்டபடி ஃபாக்ஸ் டிவியையோ வேறு எதையும் பார்க்கலாம். அது அவர்களது விருப்பம்.

இந்த ஆய்வில் கோவிட் -19 பற்றிய பார்வையாளர்களின் அணுகுமுறைகள், அது குறித்த அரசின் கொள்கைகள், மேலும் கோவிட் பற்றிய அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டன.

பங்கேற்பாளர்கள் வழக்கமான ஃபாக்ஸ் பார்வையாளர்களாக இருந்த போதிலும், அவர்களது ஊடக செய்திகளை உள்வாங்கும் தன்மை மாறத் துவங்கியது. உண்மைகள்,நம்பிக்கைகள், அணுகுமுறைகள், கண்ணோட்டங்கள், அரசியல் கருத்துக்கள் அனைத்தும் மெல்ல மெல்ல மாறத் துவங்கின என்று ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பங்கேற்பாளர்கள் விரைவிலேயே ஒன்றை ஒத்துக் கொள்ளத் துவங்கினர். அதாவது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏதும் தவறு செய்தால் அதை ஃபாக்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பாது என்பதை ஏற்றார்கள்.

சிஎன்என் தொலைக்காட்சி கோவிட் 19 பற்றிய பாதிப்புகளை, அதன் தீவிரத்தை விரிவாக ஒளிபரப்பியது. மேலும் கோவிட்டை கையாளுவதில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியுற்றதையும் அது காட்டியது. மாறாக ஃபாக்ஸ் நியூஸ் கோவிட் 19 குறித்து மிகக் குறைவான செய்திகளையே காட்டியது.

ட்ரம்ப் பற்றிய செய்திகள் - நேரடி அறிவிப்புகள்

ஃபாக்ஸ் நியூஸ் இந்த நோய் ஏன் ஒரு தீவிரமான அச்சுறுத்தலாக இல்லை எனும் தகவல்களை பார்வையாளர்களுக்கு வழங்கியது. மாறாக சிஎன்என் அந்நோயைப் பற்றிய விரிவான தகவல்களையும் அபாயத்தையும் வழங்கியது.

ஃபாக்ஸ் நியூஸ் அமெரிக்காவில் இனவெறி பற்றிய பிரச்சினைகளை அதிலும் இன சமத்துவத்திற்கான போராட்டங்களில் வன்முறை வெடித்ததாக விரிவாக காட்டியது. மேலும் பைடன் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் இனசமத்துவ நிலைகளை மேற்கண்ட வன்முறைகளுடன் ஒப்பிட்டுக் காட்டியது. சிஎன்என் இத்தகைய நோக்கில் செய்திகளை மிகக்குறைவாகவே காட்டியது.

இரண்டு தொலைக்காட்சிகளும் தபாலில் அதிபர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து செய்திகளை வெளியிட்டாலும் இரண்டும் வேறுபட்ட கண்ணோட்டங்களில் வழங்கியது. ஃபாக்ஸ் நிறுவனம் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், சிஎன்என் ட்ரம்ப் மீது விமர்சனமாகவம் இப்பிரச்சினையில் காட்டின.

பங்கேற்பாளர்கள் மூன்று நாட்களில் பங்கேற்ற பிறகு அவர்களது நம்பிக்கைகள் மாறிவந்ததை ஆய்வு பதிவு செய்திருக்கிறது.

கோவிட் நோயை சமாளிப்பதில் அமெரிக்காவை விட மற்ற நாடுகள் சிறப்பாக செயல்படுகிறது என ஆறு சதவீதப் புள்ளிகளையும், கோவிட்டின் நீண்ட கால பாதிப்புகளுக்கு ஐந்து சதவீதப் புள்ளிகளையும், கோவிட்டை விட வன்முறையை கட்டுப்படுத்துவற்கு அதிபர் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென 11 சதவீதப் புள்ளிகளையும் பார்வையாளர்கள் வழங்கினார்கள். ட்ரம்ப் மீதான நம்பிக்கை சிஎன்என் பார்த்த பிறகு மூன்று புள்ளிகள் குறைந்து போனது.

அப்போது அதிபர் வேட்பாளரான பிடன் மீது, பங்கேற்பாளர்கள் 13 புள்ளிகளுக்கும் குறைவாக ஒரு கருத்தை தெரிவித்தார்கள். அதன்படி பிளாக் லைவஸ் மேட்டர் எனப்படும் கருப்பின மக்களின் போராட்டத்தில் நிறைய போலீஸ் அதிகாரிகள் சுடப்படுவார்கள். பிடன் வெற்றி பெற்றால் இப்படி போலீஸ் அதிகாரிகள் சுடப்படுவதை அவரது ஆதவராளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பத்து புள்ளிகளுக்கும் குறைவாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

பிடன் - நேரலை செய்திகள்

சிஎன்என் பார்த்த பிறகு பார்வையாளர்கள் ஏழு புள்ளிகள் அளவில் தபால் வாக்குகளை ஆதரிக்கலாம் என்றார்கள்.

"நடப்பு நிகழ்வுகள் (அதாவது நம்பிக்கைகள்) மற்றும் 2020 அதிபர் வேட்பாளர்களின் நிலைகள் பற்றிய அறிவைப் பற்றிய பங்கேற்பாளர்களின் உண்மை உணர்வுகளில் ஃபாக்ஸ் நியூசுக்குப் பதிலாக சிஎன்என் ஐப் பார்ப்பதால் பெரிய விளைவுகளை நாங்கள் கண்டோம்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். "டொனால்ட் டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரைப் பற்றிய அணுகுமுறைகளில் ஏற்படும் மாற்றங்களையும், கோவிட் பற்றிய அவர்களின் கருத்துக்களில் பெரிய தாக்கத்தையும் அவர்கள் கண்டறிந்தனர்."

இதன்மூலம் தகவல்களை தணிக்கை செய்து வெளியிடுவதால் பார்வையாளர்கள் ஒரு தரப்பான தகவல்களை உண்மையென நம்புவது நிரூபிக்கப்பட்டது.

இறுதியில் சிகிச்சை பங்கேற்பாளர் குழுவினர் ஃபாக்ஸ் தொலைக்காட்சி அதிபர் ட்ரம்ப் பற்றிய எதிர்மறை செய்திகளை மறைத்ததாக முடிவு செய்தனர். மேலும் இப்படி தேர்தல் செய்திகளில் பாரபட்சம் காட்டுவதோடு இது ஜனநாயக அமைப்புகளுக்கு சவாலாக இருக்கும் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின் மூலம் போலிச் செய்திகளையும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஊடகங்கள் செய்யும் தொடர் பிரச்சாரம் மக்களை ஆட்டுவிப்பதையும் உண்மைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஊடகங்கள் மூலம் அதை மாற்ற முடியும் என்பதும் தெரிய வருகிறது. பாஜக ஆளும் இந்தியாவிலும் இதுதான் நிலைமை.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?