18 வயதில் கேட்டரிங் ஊழியர்; இன்று இங்கிலாந்தின் டாப் செஃப் - யார் இந்த சுரேஷ் பிள்ளை? ட்விட்டர்
உலகம்

18 வயதில் கேட்டரிங் ஊழியர்; இன்று இங்கிலாந்தின் டாப் செஃப் - யார் இந்த சுரேஷ் பிள்ளை?

Keerthanaa R
"உங்களிடம் எதுவும் இல்லாதபோது, ஏதாவது ஒரு இடத்தில் தொடங்கித் தானே ஆக வேண்டும்?”
சுரேஷ் பிள்ளை

அப்படித்தான் தொடங்கியது செஃப் சுரேஷ் பிள்ளையின் பயணம். யாரென்றே தெரியாத ஒருவரின் திருமண விருந்தில் சாதாரண சர்வராக இருந்தவர், இன்று உலகம் கொண்டாடும் ஒரு செலிபிரிட்டி செஃப்!

சமீபத்தில் தனது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்திருந்தார் சமையல் கலைஞரான சுரேஷ் பிள்ளை. அவரது நண்பர் ஒருவர் சுரேஷ் பிள்ளையின் இளம் வயது புகைப்படம் ஒன்றை அவருக்கு அனுப்பியதில் தொடங்கியது இந்த நாஸ்டால்ஜிக் பயணம்.

இந்தியாவில் பிறந்து தற்போது இங்கிலாந்தின் டாப் செஃப்களில் ஒருவராக இருப்பவர் சுரேஷ் பிள்ளை. இவரை செஃப் பிள்ளை என்று சொன்னால் இன்னும் நன்றாக அடையாளம் தெரிந்துகொள்ளலாம்.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் தெக்கும்பாகம் என்ற இடத்தில் பிறந்தவர் சுரேஷ் பிள்ளை. இவரது பெற்றோர் சசிதரண் பிள்ளை மற்றும் ராதாம்மா தென்னை நார் தொழிலாளர்கள்.

பள்ளி பருவம் முதலே செஸ் விளையாட்டில் சிறந்துவிளங்கினார். கொல்லம் மாவட்டத்தின் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வென்று சாம்பியன் பட்டமும் வென்றார்

தன் வாழ்நாள் முழுவதுமே தன்னை ஒரு தொழிலதிபராகவே நினைத்துக்கொண்டுள்ளார் சுரேஷ் பிள்ளை. சுரேஷின் வீட்டில் பம்பளி மாஸ் பழத்தின் மரம் இருந்தது. காலை உணவின்போது தினமும் இந்த பம்பளி பழத்தை அவர்கள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்காக காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பழம் பறிக்க சென்றுவிடுவார்.

அப்படி ஒரு நாள் அவருக்கு ஒரு பிசினஸ் ஐடியா தோன்றியுள்ளது. தன் வீட்டின் மரத்தில் கிடைத்த பழங்களை பறித்து சந்தையில் விற்க தொடங்கினார். ஒரு பழம் 25 பைசா என்ற விலையில் விற்றார் சுரேஷ் பிள்ளை. இதில் கிடைத்த பணத்தை தன் பாக்கெட் மனியாக பயன்படுத்திக்கொண்டார்.

“என்னிடம் இருக்கும் ஒரு ரூபாய் நோட்டுகளை என் நண்பர்களிடம் காண்பித்து பெருமையடித்துக்கொள்வதில் எனக்கு ஒரு சந்தோஷம்” என அந்த நாட்களை நினைத்து நெகிழ்கிறார் சுரேஷ் பிள்ளை.

அவரது பிசினஸ்மேன் ஆசை, கனவு எல்லாம் அங்கிருந்து தான் தொடங்கியது. பழ வியாபாரியாக தொடங்கியவர், அடுத்ததாக வறுத்த கடலை விற்க தொடங்கினார். அவரது ஊரில் உள்ள பணக்கட்டொடில் தேவி கோவிலுக்கு வருபவர்களுக்கு விற்றார்.

“சில நேரங்களில் எனக்கான வாய்ப்புகளை நானே உருவாக்கிக்கொண்டேன்”
சுரேஷ் பிள்ளை

இதற்காக அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த படகில் சவாரி செய்து 2 அல்லது 3 கிலோ பச்சை கடலை வாங்கி வருவார். அதனை மணலில் வறுத்து கோவிலுக்கு வெளியில் நின்று விற்றார். ஒரு பொட்டலம் ஒரு ருபாய் என.

“நான் அதிக கடைகள் அல்லது விழா மேடைகளுக்கு அருகில் அமர்ந்து கடலைகள் விற்றேன். அங்கு தான் நிறைய கூட்டம் வரும் என்பதால் அங்கு அமர்ந்துகொள்வேன்” என்கிறார்.

தொழில் செய்யவேண்டும் என்ற தனது ஆர்வம், நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும், சமுதாயத்தில் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கவேண்டும் என்ற பசி தான் சுரேஷ் பிள்ளையின் உந்துகோலாக இருந்துள்ளது.

தனக்கு கிடைத்த ஒரு ஒரு வாய்ப்பையும் ஏற்றுக்கொண்டு தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார்.

“சில நேரங்களில் எனக்கான வாய்ப்புகளை நானே உருவாக்கிக்கொண்டேன்” எனவும் கூறுகிறார்.

தனது பதின்பருவத்தில் ஓட்டலில் வெயிட்டராக, கோவிலுக்கு சம்பந்தமான உணவகத்தில் க்ளீனராகவும், கேட்டரிங் குழுவிலும் கூட பணியாற்றியிருக்கிறார்.

“ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டது போல உணர்ந்தாலோ, குழப்பமடைந்தாலோ அதில் தவறில்லை. ஆனால் நீங்கள் முயற்சித்துக்கொண்டே இருக்கவேண்டும், அதுதான் முக்கியம்”

இவரது இந்த ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?