லிபியா அதிபர் கடாஃபி கொல்லப்பட்ட பின்னணி
லிபியா அதிபர் கடாஃபி கொல்லப்பட்ட பின்னணி NewsSense
உலகம்

தங்கம், வெள்ளி, பெட்ரோல் சாம்ராஜ்யம் : லிபியா அதிபர் கடாஃபி கொல்லப்பட்ட பின்னணி

NewsSense Editorial Team

மத்திய தரைக்கடலுக்கு தெற்கே வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடுதான் லிபியா. இந்நாட்டின் பெரும்பகுதி சகாரா பாலைவனத்தில் இருக்கிறது. நாட்டின் தலைநகர் திரிபோலி. லிபியாவின் மக்கள் தொகை 73,62,000. மக்கள் தொகையின் பெரும்பகுதி கடற்கரை மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வாழ்கிறார்கள். திரிபோலிக்கு அடுத்த பெரிய நகரம் பெங்காசி ஆகும்.

லிபியாவின் அண்டை நாடுகளாக எகிப்து, சூடான், சாட், நைஜர், அல்ஜீரியா, துனிசியா போன்றவை இருக்கின்றன. 1950களின் பிற்பகுதியில்தான் லிபியாவில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டது. அதற்கு முன் பாலைவனம் சூழ இருந்த லிபியா ஒரு ஏழை நாடாக இருந்தது. அப்போது வெளிநாடுகளின் உதவி மற்றும் இறக்குமதியால்தான் லிபியாவின் பொருளாதாரம் பராமரிக்கப்பட்டது. பின்னர் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறியது.

Lybian Flag

கடாஃபி ஆட்சியில் பணக்கார நாடாக மாறிய லிபியா

1960களின் பிற்பகுதியில் லிபியாவின் ஆட்சி முயம்மர் கடாஃபி வசம் சென்றது. கடாஃபியின் ஆட்சியில் ஏழ்மையான ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றாக இருந்த லிபியா விரைவிலேயே பணக்கார நாடாக மாறியது. 2011 ஆண்டு வரை லிபியா மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு மட்டுமல்ல உலகில் வளரும் நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரி நாடாக திகழ்ந்தது. அந்நாடு பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று சுதந்திரமாக செயல்பட்டது. எரிபொருள், உணவு மற்றும் நீர் ஆகியவற்றில் தன்னிறைவு பெற்றது.

கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு இலவசமாகக் கிடைத்தன. ஒரு வீட்டை வைத்திருப்பது என்பது அடிப்படை மனித உரிமையாகக் கருதப்பட்டது. லிபிய அரசுக்கு சொந்தமான ஒரு மத்திய வங்கியும் இருந்தது. கடாஃபி உலகிலேயே மிகப்பெரும் நீர்ப்பாசன அமைப்பை லிபியாவில் உருவாக்கினார். அது மகத்தான ஆறு திட்டம் - கிரேட் ரிவர் திட்டம் - என்று அழைக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் நீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டது.

கடாஃபி ஏன் கொல்லப்பட்டார்?

2011 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவை அதிபர் ஒபாமா ஆட்சி செய்ய வெளியுறவுத் துறை அமைச்சராக ஹிலாரி கிளின்டன் பணியாற்றினார். அப்போது அவர்களது ஆதரவுடன் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் ஆட்சி மாற்றத்தை கோரி அரபு வசந்தப் புரட்சி முழுவீச்சில் நடந்து வந்தது.

அதே காலத்தில் கடாஃபி தனது தங்க இருப்பு மற்றும் செலாவணியின் உதவியுடன் ஆப்பிரிக்க கண்டத்திற்கான ஒரு மத்திய வங்கியை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். இதை உளவுத்துறையின் மூலம் அறிந்த ஒபாமா நிர்வாகம் லிபியாவுக்கு எதிராக திரும்பியதாக கூறப்படுகிறது.

Gaddafi- Obama

அப்போது விக்கிலீக்ஸில் துணை அதிபர் ஹிலாரி கிளின்டனின் மின்னஞ்சல்கள் வெளியாகின. அதில் ஒரு மின்னஞ்சலில், கடாஃபி அரசு 143 டன் தங்கத்தையும் அதற்கு இணையான அளவிற்கு வெள்ளியையும் வைத்திருப்பதாகவும், அந்த தங்கத்தை வைத்துக் கொண்டு ஆப்பிரிக்க கண்டத்திற்கென ஒருசெலாவணியை லிபியாவின் தங்க தினார் நாணயத்தின் பின்னணியில் உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் இருந்தது. மேலும் கடாஃபியின் திட்டம் ஆப்ரிக்காவில் அதிகம் புழக்கத்திலிருந்த பிரெஞ்சு பிராங் நாணயத்திற்கு மாற்றாக ஒரு நாணயத்தை உருவாக்கும் வண்ணம் இருந்தது என்றும் கூறுகிறது.

Hilary Clinton

கடாஃபியின் திட்டப்படி அப்படி ஒரு நாணயம் உருவாகியிருந்தால் அது ஆப்ரிக்க கண்ட நாடுகளை பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து விடுவித்திருக்கும். அதன் மூலம் டாலர், பன்னாட்டு நாணய நிதியம், பிரெஞ்சு ஆப்ரிக்கா பிராங் போன்றவற்றிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கும். மேலும் ஆப்பிரிக்க நாடுகள் பலவும் கடாஃபியின் பின்னால் அணிவகுத்திருக்கும். சொல்லப் போனால் அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல ஆப்பிரிக்க கண்ட நாடுகளும் ஒரு ஐக்கியப்பட்ட கூட்டமைப்பாகக் கூட மாறியிருக்கும்.

இதுதான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கண்களை உறுத்தியது. ஏனெனில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆப்பிரிக்க கண்டத்தின் பொருளாதாரம், கனிம வளம், ஆட்சி, உள்நாட்டுப் போர் அனைத்தையும் கட்டுப்படுத்தி வந்தன. இந்த ஏகபோகத்தை இழக்க அவர்கள் தயாராக இல்லை. இதனால்தான் 2011 இல் கடாஃபி அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

French Franc

லிபியாவில் நேட்டோவின் "மனிதாபிமானத் தலையீடு"

லிபியாவில் கடாஃபி அரசை அழிக்க வேண்டுமென முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசி நெடுங்காலமாக குரல் எழுப்பி வந்தார். இவர் 2011 இல் உலக நிதி பாதுகாப்பு முறைக்கு கடாஃபி ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என கூறினார். உண்மையில் இது உலக நிதி பாதுகாப்புக்கு அல்ல, அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளுக்குத்தான் பாதிப்பு.

ஏனெனில் கடாஃபி பெட்ரோல் வர்த்தகத்தில் நாணயமாக இருக்கும் டாலரை இல்லாமல் செய்து விடுவார். மேலும் பொதுவான ஆப்பிரிக்க செலாவணியை உருவாக்கும் பட்சத்தில் அமெரிக்க மற்றும் அதன் நேசநாடுகளின் நிதி ஏகபோகத்தை அசைத்துப் பார்ப்பார். இதை ஏற்கனவே 2001 இல் ஈராக்கின் அதிபராக இருந்த சதாம் ஹுசேன் செய்தார். அவர் பெட்ரோல் ஏற்றுமதிக்கு டாலருக்கு பதில் யூரோ நாணயத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் ஏகபோகத்தை உடைத்தார். அதனாலேயே அவர் மேற்குல நாடுகளால் கொல்லப்பட்டார்.

ஆனால் கடாஃபியோ மேலும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவர் மக்கள் பார்வையில் பகிரங்கமாக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அதன் மூலம் உலகிற்கு ஒரு பாடத்தை கற்பிக்க ஹிலாரி கிளின்டனும் அமெரிக்க நிர்வாகமும் நினைத்தது. யாராவது மேற்குலகின் பொருளாதார ஏகபோகத்தை சிதைக்க நினைத்தால் அவர்களின் கதி இதுதான் என்பதற்கு கடாஃபியின் மரணம் ஒரு எடுத்துக் காட்டு. இதுதான் லிபியாவை குண்டுமாரி பொழிந்து அழித்த நேட்டோ நாடுகளின் செய்தி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?