Gianduiotto  Twitter
உலகம்

அரச குடும்பங்களுக்காக தயாரிக்கப்பட்ட ஓர் சாக்லெட்டின் வியக்க வைக்கும் ரகசியம் தெரியுமா?

NewsSense Editorial Team

உலகின் அதிவேக ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு எப்படி இத்தாலியின் மாடெனா (Modena) மாகாணம் தாயகமாகத் திகழ்கிறதோ, அப்படி Gianduiotto என்கிற உலகப் புகழ்பெற்ற சாக்லேட்டுக்கு இத்தாலியின் பிட்மான்ட் மாகாணம் தாயகமாகத் திகழ்கிறது.

அதென்ன Gianduiotto. அத்தனை பிரமாதமான சாக்லேடா? டைரி மில்கை விட பிரமாதமாக இருக்குமா? என்று கேட்டால், ஆம்தான் விடை என்கிறார்கள் Gianduiotto ரசிகர்கள்.

நுடெல்லா (Nutella) என ஒரு சாக்லேட் ஸ்பிரட் உணவை பிரெட்டின் மீது தடவிச் சுவைத்துச் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்குப் பிடித்த உணவின் தகப்பனாரே இந்த Gianduiotto சாக்லேட் தான் என்கிறது சிஎன்என்.

உயர் தர சாக்லேட் கொட்டைகள், அதி உயர் தர பிட்மான்ட் பிராந்தியத்தில் விளைந்த ஹேசில்நட் கொட்டைகள், சர்க்கரை சேர்த்து பதமாக உருவாக்கப்படுவது தான் இந்த Gianduiotto சாக்லேட்கள்.

உலக சாக்லேட் வரலாற்றில் முதன்முதலில் தன் வழுவழு மொழுமொழு தேகத்தை ஃபாயில் ஆடைக்குள் மூடி மறைத்துக் கொண்ட சாக்லேட் ராணி Gianduiottoதான்.

சாக்லேட்

இதைவிட மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதை எந்த ஒரு தனி நிறுவனமும் தனியாக உருவாக்கவில்லை. இத்தாலி நாட்டில் பல்வேறு சாக்லேட் உற்பத்தியாளர்கள் நூறாண்டுக் காலமாகத் தயாரித்து வந்தனர். காலப் போக்கில் பல சாக்லேட் உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தகுந்தாற் போல பல்வேறு சுவைகளையும், தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தகுந்தாற் போலப் பல அளவுகளிலும் உருவாக்கினர்.

கொஞ்சம் வரலாறு

1500களில் ஹவுஸ் ஆஃப் சவாய் (House of Savoy) என்கிற இத்தாலிய அரச குடும்பத்துக்காக சாக்லேட் செய்பவர்கள் முதன்முதலில் Gianduiotto-வை தயாரித்தனர்.

1865ஆம் ஆண்டு கார்னிவல் திருவிழாவில், Gianduja வேடம் போட்டிருந்த ஒரு நடிகரால் முதல்முறையாக Gianduiotto சாக்லேட் இத்தாலிய மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இத்தாலியக் கலாச்சாரப் படி Gianduja என்பவர், எளிய விவசாயப் பின்புலம் கொண்ட மனிதர், அவருக்கு ஒயின் மிகவும் பிடிக்கும். அவர் இத்தாலியில் வாழ்ந்த மக்களின் உணவு சார்ந்த சுகபோகங்களைப் பிரதிபலிக்கும் உருவமாகக் கருதப்பட்டார்.

Gianduiotto சாக்லேட் வெறுமனே ஒரு உலகப் புகழ்பெற்ற மிட்டாய் மட்டுமல்ல, இத்தாலியின் டுரின் நகரத்தின் அடையாளங்களில் ஒன்று என்கிறார் உலகப் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பாளரான கைடோ கஸ்டாக்னா (Guido Castagna).

தொடக்கத்தில் சர்வசாதாரணமாகத் தயாரிக்கப்பட்ட Gianduiotto சாக்லேட்கள், காலப் போக்கில் தனக்கான பட்டாபிஷேகத்தை நடத்திக் கொண்டு, பணக்காரர்கள் நாக்கில் சுவையாகவும், இதயத்திலும் நினைவாகவும், மூளையில் டோபோமைன் விளைவாகவும் குடிகொண்டது.

COCO Nuts

சரி Gianduiotto சாக்லேட் எப்படித் தயாரிக்கிறார்கள்?

இதை விளக்க வேண்டுமானால், பிரான்ஸ் நாட்டின் நாயகனாகத் திகழ்ந்த நெபோலியன் போனாபார்டைப் பற்றியும் இங்குப் பேசியாக வேண்டும்.

நெபோலியன் 1806ஆம் ஆண்டு வடக்கு இத்தாலியைக் கைப்பற்றிய பிறகு, பிரிட்டன் மீது போர் தொடுத்தார். அந்த காலகட்டத்தில் பிரிட்டனிலிருந்து இத்தாலிக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதில் சாக்லேட் தயாரிக்க அவசியமான கோகோ கொட்டைகளும் அடக்கம்.

இந்த பற்றாக்குறையைச் சமாளிக்க, டுரின் நகரத்திலிருந்த சாக்லேட் தயாரிப்பாளர்கள், அதிகமான ஹேசில் நட் கொட்டைகளையும் (அப்பகுதியில் அது தான் விலை மலிவாகவும் எளிதாகவும் கிடைத்தது), சர்க்கரை மற்றும் கொஞ்சமாக கோகோ கொட்டைகளையும் சேர்த்து ஒரு சாக்லேட்டை உருவாக்கினார்கள். அப்படித்தான் Gianduiotto உருவானது என்கிறது சிஎன்என்.

சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பியரொ ஃபெர்ரெரோ (Pietro Ferrero) என்பவர் இன்று நாம் பிரட்டில் தடவிச் சாப்பிடும் நுடெல்லாவை, இந்த Gianduiotto சாக்லேட்டுக்கான ரெசிபியை வைத்தே உருவாக்கினார்.

ஒயிட் சாக்லேட்

இன்று Gianduiotto ஒரு சாக்லேட் ரகமாகப் பரிணமித்துள்ளது. அதில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட், பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் சாக்லேட் என பல வகைகளில் இன்று சந்தையில் கிடைக்கின்றன.

சுமார் 25 - 40 சதவீதம் ஹேசில்நட் கொட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் Gianduiotto சாக்லேட்களை Gianduiotti என்று அழைக்கிறார்கள்.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை Gianduiotti சாக்லேட்களை கை தேர்ந்த பெண் சாக்லேட் தயாரிப்பாளர்கள்தான் தயாரித்து வந்தார்களாம். காரணம் இந்த சாக்லேட்களை தயாரிக்க நல்ல பொறுமையும், அதிவேகமும் ஒருங்கே இருக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களை gianduiere என அழைக்கிறார்கள்.

1960கள் வரை மனித கைகளால் மட்டுமே செய்யப்பட்டு வந்த Gianduiotto & Gianduiotti சாக்லேட்கள், தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்திரங்களின் கைகளுக்குச் சென்றது.

இப்போது இத்தாலியில் A.Giordano boutique என்கிற கடையில் மட்டுமே gianduiere-களைப் பயன்படுத்தி Gianduiotto சாக்லேட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. gianduiere-களை பணியமர்த்துவது அதிகம் செலவு பிடிக்கும் விஷயம் என்கிறார் அக்கடையின் உரிமையாளரான லாரா ஃபலெட்டி.

சாக்லேட்

அது போக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, 1897ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சாக்லேட் ஆய்வகத்தில் சில gianduiere இன்னும் இருக்கிறார்கள்.

இத்தனை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த Gianduiotto சாக்லேட்கள் இன்றைய காலத்துக்குத் தகுந்தாற் போலத் தன்னை மாற்றிக் கொண்டு... ஆரஞ்சு, காபி, பிஸ்தா, சர்க்கரை சேர்க்கப்படாத சுகர் ஃப்ரீ... என பல்வேறு வகைகளில் வெளியாகின்றன.

அதே போல ஒரு காலத்தில் ஒரே அளவில் மட்டுமே வெளியாகி வந்த Gianduiotto சாக்லேட்கள், இன்று மக்களின் ரசனைக்கு ஏற்ப 250 கிராம் பார்களாகவும், 1.2 கிலோ எடைகொண்ட பெரிய சாக்லேட் துண்டுகளாகவும் வருகின்றன. என்ன இருந்தாலும், ஆரம்பக் காலத்தில் வந்து கொண்டிருந்த அந்த சின்ன Gianduiotto சாக்லேட்களுக்குத் தான் இப்போதும் சந்தையில் அதீத வரவேற்பு இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பாளரான கைடோ கஸ்டாக்னா (Guido Castagna) கூட, ஹேசில்நட், கரும்புச் சாறு, கோகோ கொட்டைகளைச் சேர்த்து ஒரு Gianduiotti சாக்காட்டைத் தயாரித்துள்ளார்.

ஒரு சாக்லேட்டுக்கு இத்தனை பெரிய வரலாறு என்பதே நம்மை மலைக்க வைக்கும் விஷயம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வாய்ப்பு கிடைத்தால் ஒரு துண்டு Gianduiotto-வை வாங்கி சுவைத்துப் பாருங்கள். நிச்சயம் இரண்டாவது துண்டையும் சுவைப்பீர்கள் என்பது மட்டும் கேரன்டி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?