நீங்கள் உங்களது செல்ல நாயை ஜாலியாக நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லும் போது, பக்கத்தில் உள்ளவர் ஒரு கொலைகார முதலையுடன் நடந்து சென்றால்... கற்பனையிலே பயமுறுத்தும் இந்த சம்பவம் உண்மையிலேயே நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் எமோஷனல் சப்போர்ட் முதலையை பலர், லவ் பார்க் என்ற இடத்தில் பார்த்துள்ளனர்.
பொதுவாக முதலைகளுக்கு இருக்கும் ஆக்ரோஷம் இல்லாமல் இருந்த அந்த அலிகேட்டர் முதலை சாதாரணமாக நடந்து சென்றது. அங்குள்ள சிலர் அந்த முதலையுடன் பழகினர்.
ப்ரிக்மில் என்ற டிவிட்டர் பயனர் பகிர்ந்த புகைப்படத்தில் காலருடன் இருக்கும் முதலை ஒன்று பார்க்கில் சாவகாசமாக நடக்கிறது. அந்த ட்வீட்டில் "இது பயிற்சி இல்லை, லவ் பார்கில் ஒரு எமோஷனல் சப்போர்ட் முதலை இருக்கிறது" என்று தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார்.
முதலையை கொண்டு வந்திருந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு இருந்திருக்கின்றனர். பார்க்குக்கு வந்த குழந்தைகள் முதலையுடன் விளையாடியதாகவும அந்த முதலை அனைவருடனும் நட்பாக இருந்ததாகவும் அந்த பெண் the Philly Voice news site என்ற செய்தி தளத்தில் கூறியுள்ளார்.
உண்மையாகவே அந்த முதலை நட்பாக பழகியிருக்கிறது. பலர் அந்த முதலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
5 அடி நீளமான அந்த அலிகேட்டர் முதலை பிரலமடைந்துள்ளது. அதன் பெயர் வாலி. அமெரிக்க அலிகேட்டரான வாலிக்கு 7 வயதாம். 2016ம் ஆண்டு ஊர்வன ஆர்வலரான ஜோயி ஹென்னி என்பவர் அந்த அலிகேட்டரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
மக்களிடன் அதிக அன்பைப் பெறும் இந்த முதலை துரதிஷ்டவசமாக புற்றுநோயுடன் போராடி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust