குறைவாக வேலை பார்த்து அதிகமாக சம்பாதிக்கவேண்டும் என்பது தான் நம்மில் பலருக்கு ஆசை. ஆனால், என்ன தான் முட்டி மோதி வேலை பார்த்தாலும், ஒட்டுற மண் தான் ஒட்டும் என்பது போல அதே சம்பளம் தான் அப்ரைசல் வரும் வரை.
ஆனால், இந்த 20 வயது இளம் பொறியாளர் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் வேலை பார்க்கிறார். ஆனால் அவரது ஆண்டு வருமானம் என்னவோ ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்!
அவரது கதை என்ன?
டிவான் என்ற புனைப்பெயர் கொண்ட அந்த இளைஞர் கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றிவருகிறார்.
இவர் அன்றாடம் காலை 9 மணிக்கு விழிக்கிறார். காலை உணவை சமைத்து சாப்பிடுகிறார். அதன் பின்னர் ஆசுவாசமாக வேலையை தொடங்குபவர் 11 மணி வரை தான் வேலை பார்க்கிறார். சில நாட்கள் 12 மணி வரை நீடிக்கிறது இவரது வேலை.
கூகுள் நிறுவனத்திற்காக கோடிங் தயாரித்து கொடுக்கிறார் டிவான். ஒரு வாரத்திற்கான கோடிங் தயாரானவுடன் அவரது மேலாளருக்கு அதனை அனுப்பிவிடுகிறார்.
அதன் பிறகு தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பணிகளை மேற்கொள்கிறார் டிவான்
ஃபார்ச்யூன் தளத்திற்கு அவர் அளித்திருந்த அறிக்கையில் இந்த தகவல்களை பகிர்ந்திருந்தார் டிவான். தான் கூகுள் நிறுவனத்தில் இண்டெர்ன்ஷிப் செய்த போதே அவரது பணிச் சுமை எப்படி இருக்கும் என்பதை கணித்துவிட்டதாகவும் கூறுகிறார்.
இதற்கு முன் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றியதையும், தற்போது கூகுளில் பணியாற்றி வருவது குறித்தும் பேசியிருந்தார் டிவான். ஆப்பிளை விட கூகுளில் பணிச் சூழல் ஊழியர்களுக்கு ஏதுவாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust