ஒரே இடத்தில் கூடிய 178 Hirokazu Tanaka - புதிய கின்னஸ் சாதனை Twitter
உலகம்

ஒரே இடத்தில் கூடிய 178 Hirokazu Tanaka - புதிய கின்னஸ் சாதனை

Antony Ajay R

என்னதான் தினுசு தினுசாக, புதுசு புதுசாக பெயர்கள் வைத்துக்கொண்டாலும் உலகம் முழுவதுமே பெயர்களுக்கு பஞ்சம் என்பது இருக்கத்தான் செய்கிறது.

தாத்தா பெயர், சாமி பெயர் வைப்பது எல்லாம் புதிதாக பெயர் யோசிக்க முடியாததாலோ தான் எனவும் சில நேரங்களில் தோன்றும்.

பள்ளி கல்லூரி வகுப்பறைகளில் எஸ்.கார்த்திகேயன், ஏ.கார்த்திகேயன், சி.கார்த்திகேயன் என ஒரே பெயரில் பலர் இருப்பதனால் குழப்பங்கள் ஏற்படும். இதனைப் போக்க நண்பர்கள் நெட்ட கார்த்தி, குட்ட கார்த்தி, கருப்பு கார்த்தி என்றெல்லாம் பண்பு பெயர்கள் வைத்து பட்டையகிளப்பிவிடுவார்கள்.

ஒரு நேரத்தில் ஒரு பெயரைச் சொல்லி அழைத்தால் அதே பெயரில் இருக்கும் இன்னொருவர் திரும்பிப் பார்ப்பது இயல்பு தான். இந்த அரங்கில் Hirokazu Tanaka என்ற பெயரை அழைத்தால் 178 பேர் திரும்பிப்பார்பார்கள்.

இது ஒரு கின்னஸ் சாதனைக்கான அரங்கு. ஒரே பெயரில் இருக்கும் பலரை ஒருசேர பார்ப்பது தான் அந்த சாதனை.

ஜப்பானைச் சேர்ந்த Hirokazu Tanaka என்ற நபர் இந்த சாதனையைப் படைக்க ஏற்கெனவே இருமுறை முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. இப்போது 3வது முறையாக இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார்.

முன்னதாக 2005ம் ஆண்டு Martha Stewarts என்ற பெயரில் இருக்கும் 164 பெண்கள் ஒன்றாக சேர்ந்து இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?