Hamas : இஸ்ரேல் மீது போர்தொடுத்த இஸ்லாமிய அமைப்பின் பின்னணி என்ன? - சுருக்கமான வரலாறு Twitter
உலகம்

Hamas : இஸ்ரேல் மீது போர்தொடுக்கும் இஸ்லாமிய அமைப்பின் பின்னணி என்ன? - சுருக்கமான வரலாறு

இஸ்ரேலின் கசா பகுதியை கைப்பற்றும் முயற்சியை தீவிரமாக எதிர்க்க உருவான பாலஸ்தீனிய அமைப்பு தான் ஹமாஸ். மீண்டும் பழைய முழு இஸ்லாமிய பிரதேசமாக பாலஸ்தீனை உருவாக்க, இஸ்ரேலை அழிப்பதே எங்கள் நோக்கம் என்கிறது இதன் சாசனம்.

Antony Ajay R

இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்து உலகின் கவனத்தைப் பெற்றுள்ளது ஹமாஸ் என்ற அமைப்பு. பாலஸ்தீனில் இதுபோல பல அமைப்புகள் செயல்பட்டாலும் ஹமாஸ் அதிக பலத்துடன் இருக்கிறது. குறிப்பாக கசா பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது பாலஸ்தீன்.

கடந்த 7ம் தேதி முதல் நடந்துவரும் போரில் இஸ்ரேல் தரப்பும் பாலஸ்தீன் தரப்பும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். உலகிலேயே மிகப் பெரிய உளவு அமைப்பான மொசாட்டைக் கொண்டிருக்கும் இஸ்ரேல் கூட இந்த தாக்குதலை எதிர்பார்த்ததாக தெரியவில்லை.

யார் இந்த ஹமாஸ்? அவர்களின் வரலாறு? இந்த தாக்குதலின் நோக்கம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

ஹமாஸின் வரலாறு

இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் சுருக்கம் தான் ஹமாஸ். ஒட்டாமன் பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு காலனித்துவ காலத்தில் பாலஸ்தீன பகுதியில் அதிக அளவில் யூதர்கள் குடியேறினர்.

குறிப்பாக ஜெர்மனியில் நாசி இயக்கத்தின் இன அழிப்பில் இருந்து தப்பியவர்கள் பாலஸ்தீன் பகுதிக்கு வந்தனர். அதனை தங்கள் தாய்நாடாக கருதினர்.

பாலஸ்தீனில் வாழ்ந்த அரேபிய முஸ்லீம்கள் இதனை விரும்பவில்லை. யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மோதல் போக்கு நிலவியது.

பாலஸ்தீன் பகுதியை காலனியாதிக்கம் செய்துவந்த இங்கிலாந்து, இரு நாடுகளை பிரிக்க வேண்டும் என உலகநாடுகள் அழுத்தம் கொடுத்தன. ஆனால் அது முடியவில்லை. முஸ்லீம்களும் யூதர்களும் இங்கிலாந்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர்.

இறுதியாக யூதர்களுக்கான நாடாக இஸ்ரேல் உருவானது என அறிவித்தனர் யூத தலைவர்கள். இஸ்ரேல், ஜோர்தான் ஆற்றின் மேற்குகரை, சிரியாவின் சில மலைப்பகுதிகள், லெபனானின் பகுதிகள் மற்றும் கசா பகுதி போன்ற இடங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை முன்னிட்டு பல போர்களும் நடந்திருக்கின்றன.

இஸ்ரேலின் கசா பகுதியை கைப்பற்றும் முயற்சியை தீவிரமாக எதிர்க்க 1987ல் உருவான பாலஸ்தீனிய அமைப்பு தான் ஹமாஸ். பழமையான இஸ்லாமிய பிரதேசமாக பாலஸ்தீனை உருவாக்க, இஸ்ரேலை அழிப்பதே எங்கள் நோக்கம் என்கிறது இதன் சாசனம்.

ஹமாஸின் இராணுவ பிரிவு அட்-டின் அல்-கசாம். இது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுப்பது, இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மறுபுறம் நலத்திட்டங்களையும் செய்துவருகிறது ஹமாஸ்.

காலப்போக்கில் தேர்தல் அரசியலிலும் ஹமாஸ் ஈடுபட்டது. 2006ம் ஆண்டு நடந்த பாலஸ்தீன் தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றிபெற்றது. கூட்டணி ஆட்சியில் இருந்த போது கசா பகுதியில் பாலஸ்தீன் பிரதமர் முகமது அப்பாஸின் ஃபதா இயக்கத்துடன் பிரச்னை ஏற்பட்டது. இதனால் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டு கசா பகுதியை மட்டும் பாதுகாத்து வருகிறது ஹமாஸ்.

பாலஸ்தீன் அரசு யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்காக இரண்டு நாடுகளை உருவாக்கும் தீர்வை ஏற்றுக்கொண்டது. ஆனால் ஹமாஸ் தங்களது பூர்வீக நிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கானதே என்கிறது.

அதற்கு பிறகு ஹமாஸ் - இஸ்ரேல் இடையே நான்கு முக்கிய மோதல்கள் நடைபெற்றிருக்கிறது. மறுபுறம் எகிப்து ஹமாஸை தனிமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது.

ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேல், எகிப்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் தீவிரவாத அமைப்பாக கருதுகின்றன.

1973ம் ஆண்டு எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனுக்கு எதிராக தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதலில் 50வது ஆண்டு நினைவு நாளுக்கு அடுத்த நாள் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது ஹமாஸ் அமைப்பு.

இப்போது நடைபெறும் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா குரலெழுப்பியிருக்கிறது. அமெரிக்கா தங்களது போர்கப்பலை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் தங்களுக்கு பிற நாடுகளின் உதவி தேவையில்லை எனக் கூறியிருக்கின்றனர்.

ஹமாஸ் அமைப்புக்கு ஈரான், ஈராக், கத்தார் மற்றும் லெபனான் நாடுகள் உதவுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியிருக்கிறது. ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் வடக்கு பகுதியில் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்த தாக்குதல் எவ்வித உயிரிழப்பையும் ஏற்படுத்த வில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?