அடையாளம் தெரியாமல் மாறிப்போன உக்ரைன் ராணுவ வீரர் twitter
உலகம்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன உக்ரைன் ராணுவ வீரர் - பதைபதைக்க செய்த புகைப்படம்

இவர் ரஷ்ய படையிடம் சிக்கும் முன் எப்படி இருந்தார் என்ற புகைப்படமும் சில மாதங்கள் கழித்து விடுதலை ஆன பின்னர் எப்படி இருக்கிறார் என்ற புகைப்படத்தையும் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.

Keerthanaa R

ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது.  8 மாதங்கள் கடந்தும் இன்னும் முடிவுக்கு வராத இந்த போர், உக்ரைன் நாட்டையே புரட்டிப்போட்டது என்றே கூறலாம்.

சொந்த நாட்டை விட்டு அகதிகளாக மற்ற நாடுகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ராணுவ வீரர்கள் மட்டும் தான் நாட்டை காக்கும் பொறுப்பு உள்ளவர்களா? எங்களுக்கும் நாட்டின் மீது அக்கறை உள்ளது என பணக்காரர், ஏழைகள் என பேதமில்லாமல் ஆயுதமேந்தி உக்ரைனியர்கள் இன்னும் போர் புரிந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ரஷ்யா பல ராணுவ வீரர்களை சிறைபிடித்து வைத்து சமீபத்தில் விடுதலை செய்தது. 

அவர்களில் ஒரு வீரரின் இரண்டு வெவ்வேறு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மைகாலியோ டியானாவ் என்ற அந்த ராணுவ வீரர் உக்ரைனின் அசாவ் ரெஜிமென்ட்டில் இருந்தவர். இவரை சமீபத்தில் செர்னிகிவ் பிராந்தியத்தில் போர்க் கைதியாக ரஷ்யா விடுவித்தது என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர் ரஷ்ய படையிடம் சிக்கும் முன் எப்படி இருந்தார் என்ற புகைப்படமும் சில மாதங்கள் கழித்து விடுதலை ஆன பின்னர் எப்படி இருக்கிறார் என்ற புகைப்படத்தையும் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. மாறியிருக்கும் அவரது தோற்றம், இணையத்தில் பலரது மனதை கனக்க செய்துள்ளது

உக்ரேனிய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோ கூறுகையில், அந்த ராணுவ வீரரின் ஒரு கையில் 4 சென்டிமீட்டர் அளவிற்கு எலும்பு இல்லை என தெரிவித்தார். 

போர் கைதியாக விடுவிக்கப்பட்டுள்ள மைகாலியோ தற்போது சிகிச்சைக்காக கீவ் நகரின் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை மிக மோசமாக இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி அவருக்கு தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மன ரீதியாகவும் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மைகாலியோவின் மகள் நிதி திரட்டிவருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கடந்த மே மாதம் மரியுபோல் போரில் சிறைபிடிக்கப்பட்டார் மைகாலியோ. நான்கு மாதங்கள் ரஷ்ய சிறையில் சித்ரவதை அனுபவித்த பின்னர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?