சக மனிதனுக்கு தானமாக வழங்கப்படும் ரத்தமானது, ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.
18 வயது நிறைவடைந்த பின், தகுதியான யாரும் ரத்ததானம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுதல் அவசியம். இங்கும் ஒரு பெண், முதன்முறை ரத்த தானம் செய்யத் தொடங்கியதிலிருந்து இதுவரை 203 யூனிட் ரத்தம் தானமாக கொடுத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது.
ஜோசபீன் என்ற பெண்ணுக்கு தற்போது வயது 80. இவர் கிட்ட தட்ட 6 தசாப்தங்களாக ரத்த தானம் செய்து வருகிறார்.
1965ஆம் ஆண்டு இவருக்கு 22 வயது இருந்தபோது முதன்முதலில் ரத்த தானம் செய்யத் தொடங்கினார் ஜோசபீன். அன்று முதல் இதுவரை 203 யூனிட்கள் ரத்த தானம் செய்து பல ஆயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.
அதிக அளவில் ரத்த தானம் செய்த பெண் என்ற சாதனையை படைத்துள்ள ஜோசபீனின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று, இவரது சேவையை பாராட்டி பெருமைப்படுத்தியிருக்கிறது கின்னஸ் உலக சாதனைகள்
முதன்முதலில் 1965ல் இவரது சகோதரி அழைத்ததன் பேரில் தான் ஜோசபீன் ரத்த தானம் செய்துள்ளார். இவரது ரத்த வகை O+ve ஆகும். இது தான் உலகின் மிக அதிகமாக மனிதர்களில் காணப்படும் ரத்த வகை.
அப்படியெனில், இதன் தேவையும் அதிகம் தானே?
இதனால், ஜோசபீன் ரத்த தானம் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டார். மேலும் அமெரிக்க ரெட் கிராஸின் தரவுகள் படி, 37 சதவிகித அமெரிக்கர்களின் ரத்த வகை O+ve தான்!
தற்போது 80 வயதை அடைந்தும் தனது சேவையை தொடர்ந்து வருகிறார் ஜோசபீன். அதிகபட்ச வயது வரம்பு என்று ரத்த தானத்திற்கு இல்லை என்பதனால், தன்னால் எவ்வளவு நாள் முடியுமோ அதுவரை இதனை செய்வேன் என்றும் கூறியிருக்கிறார் அப்பெண்.
ஜோசபீனின் இந்த சேவையை பாராட்டி பலரும் நெகிழ்ந்துள்ளனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust