History of Guide Dogs Twitter
உலகம்

Guide Dogs : மனிதர்களுக்கு கண்களாக இருக்கும் நாய்கள் - வழிகாட்டும் விலங்குகள் உருவான கதை!

Keerthanaa R

பொதுவாக செல்லப்பிராணிகள் தங்களது உரிமையாளருக்கு உற்ற தோழனாகவும், சிறந்த பாதுகாவலராகவும் இருக்கும். குறிப்பாக நாய்கள் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒரு பிராணியாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை இன்னும் அதிகரிக்கவே கைட் டாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

கைட் டாக்ஸ் அல்லது சீயிங் ஐ டாக் என்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பாக கண்பார்வை குறைபாடு இருப்பவர்களுக்கு வழிகாட்டியாக நாய்கள் செயல்படுகிறது . இவை தங்களது உரிமையாளர்களுக்கு வழிகாட்ட, பாதுகாக்க, உதவி புரிய பயிற்சி கொடுக்கப்படுகிறது.

One Year of News Sense

முதலாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் தொடங்கியது இந்த கைட் டாக் பயிற்சி. போரின் போது ஆபத்தான, விஷ வாயுக்களின் தாக்கத்தால் பல ராணுவ வீரர்கள் தங்கள் பார்வைகளை இழந்திருந்தனர். அப்போது மருத்துவர் ஜெராட் ஸ்டாலிங் என்பவர் தான் முதன் முதலில் பார்வை இழந்த ராணுவ வீரர்களை வழிநடத்த நாய்களை பயிற்சியில் ஈடுபடுத்தினார்.

மருத்துவர் ஸ்டாலிங் ஒரு முறை ஒரு நோயாளியுடன் நடந்து சென்றுக்கொண்டிருக்கையில், மற்றொரு அழைப்பு வரவே, தனது நாயை நோயாளியுடன் விட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து திரும்பியவர், தன் நாய் அந்த நோயாளியுடன் பழகியதை பார்த்தார்.

மருத்துவர் ஸ்டாலிங்கின் நாய், பார்வையற்ற அந்த மனிதருக்கு உதவியதை அவர் கவனித்துள்ளார். இதை பார்த்ததும், அவருக்கு இந்த யோசனைத் தோன்றியுள்ளது.

பார்வை இழந்தவர்களின் வழிகாட்டிகளாக இருக்க நாய்களுக்கு பயிற்சியளிக்க மற்ற வழிகளையும் தேடிக் கண்டறிந்தார் மருத்துவர். இவ்வாறாக, 1916ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஓல்டென்பர்க் என்ற இடத்தில், கைட் டாக்கிற்கான பிரத்யேக பயிற்சிப் பள்ளி ஒன்றை அவர் நிறுவினார். மெதுவாக இந்த சிறப்பு பள்ளி மற்ற இடங்களிலும் நிறுவப்பட்டன. ஓரு வருடத்திற்கு 600 நாய்களுக்கு இந்த பள்ளிகளில் பயிற்சியளிக்கப்பட்டன.

போர் மட்டுமல்லாது பிற காரணங்களால் பார்வை திறன் இழந்தவர்களுக்கும் இந்த கைட் டாக் வழங்கப்பட்டன. நாய்களின் தரம் காரணமாக மருத்துவர் ஸ்டாலிங்கின் பள்ளி 10 வருடங்களில் மூடப்பட்டது.

ஆனால், இந்த நேரத்திற்குள், பெர்லினின் போஸ்ட் டாம் என்ற இடம் உட்பட மற்ற இடங்களிலும் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டதால், ஒரு மாதத்திற்கு 12 நாய்கள் என, பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

மற்றொரு புறம், அமெரிக்காவை சேர்ந்த டாரதி என்ற பெண் சுவிட்சர்லாந்தில் ராணுவம், காவல்துறை மற்றும் கஸ்டம்ஸ் துறைக்காக நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். மருத்துவர் ஸ்டாலிங்கிற்கு பிறகு, டாரதியின் முயற்சியால்தான் உலகெங்கும் இந்த கைட் டாக் என்ற வழக்கம் பரவியது.

போஸ்ட் டாம் பயிற்சிப் பள்ளியை பற்றி கேள்விப்பட்ட டாரதி, அங்கு சென்று நடப்பவைகளை பார்வையிட்டார். போஸ்ட் டாம் பயிற்சி பள்ளியை பற்றி அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்றையும் எழுதினார். இந்த கட்டுரை தான் அமெரிக்காவில் கைட் டாக் கலாச்சாரத்தை கொண்டுவர ஆரம்பமாக இருந்தது.

மோரிஸ் ஃபிரான்க் என்ற பார்வையற்ற நபர் ஒருவர் இந்த கைட் டாக் பற்றி கேள்விப்பட்டு, அமெரிக்காவில் இதனை அறிமுகப்படுத்த உதவி புரிய தயாராக இருப்பதாக டாரதியிடம் தெரிவித்தார். இப்படி மெல்ல அமெரிக்கா, பிரிட்டன் என உலகின் மற்ற நாடுகளுக்கும் இந்த வழக்கம் பரவத் தொடங்கியது.

வழிகாட்டி நாய்களால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறை மாற்றியமைக்கப்படுள்ளது.

டாரதி யூஸ்டிஸின் குடும்பத்தினர் அவருக்கு பிறகும் உலகெங்கிலும் பார்வையற்ற மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?