Vietnam War

 

Facebook

உலகம்

வியட்நாம் போர் வரலாறு : வல்லரசு நாட்டை மண்ணை கவ்வ வைத்த சிறிய நாடு | பாகம் 3

இந்தப்போர் அமெரிக்க மக்களிடையே உளவியல் ரீதியாக ஏற்படுத்திய விளைவுகள் இன்னும் ஆழமானவை. இந்தப் போர் அமெரிக்கா தோற்கடிக்க முடியாத நாடு எனும் பிம்பத்தை தகர்த்தது.

NewsSense Editorial Team

1970-ம் ஆண்டில் அமெரிக்க மற்றும் தெற்கு வியட்நாம் கூட்டணிப் படை கம்போடியா மீது ஆக்கிரமித்தது. அங்கே வடக்கு வியட்நாமின் கம்யூனிச அரசிற்கு பொருளுதவி அளிக்கும் தளங்களை அழிப்பதே இப்படையெடுப்பின் நோக்கமாகும். இதே காலத்தில் இதே நோக்கத்தோடு தெற்கு வியட்நாம் அரசு லாவோஸ் நாட்டின் மீதும் படையெடுத்தது. ஆனால் அந்தப் போரில் வடக்கு வியட்நாம் வெற்றி பெற்றது.

Kent State Massacre

கென்ட் மாநில துப்பாக்கிச் சூடு

இப்படி அண்டை நாடுகள் மீது படையெடுத்தது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். இதன் பொருட்டு அமெரிக்கா முழுவதும் கல்லூரி வளாகங்களில் பெரும் போர் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. மே 4, 1970-ல் ஓஹியோவில் இருக்கும் கென்ட் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு 10 நாட்கள் கழித்து மிசிசிபியில் இருக்கும் ஜாக்சன் மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த போர் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் அமெரிக்கா முழுவதும் தீவிரமாக போர் எதிர்ப்பு போரட்டங்களை அலை அலையாக எழுப்பின.

1972 ஜூன் இறுதியில் தெற்கு வியட்நாம் மீதான தனது தாக்குதல் தோல்வியுற்ற பிறகு வடக்கு வியட்நாம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இறுதியில் விரும்பியது. இதை ஒட்டி கிஸ்ஸிங்கரும், வடக்கு வியட்நாம் பிரதிநிதிகளும் ஒரு முன்வரைதைலை தயார் செய்தனர். ஆனால் அதை தெற்கு வியட்நாம் நிராகரித்த்து. அதே ஆண்டு டிசம்பரில் அமெரிக்க அதிபர் நிக்சன் வடக்கு வியட்நாமின் தலைநகரான ஹனோய் மற்றும் ஹைபோங் நகர் மீது குண்டுமாரி பொழிய உத்திரவிட்டார். இது கிறிஸ்மஸ் குண்டுவீச்சு என்று வரலாற்றில் அழைக்கப்பட்டது. இத்தகைய கொடூரமான தாக்குதலை சர்வதேச சமூகம் கண்டித்தது.

The Post Movie

பென்டகன் தரவுகள் கசிவு

வியட்நாமில் 1945 முதல் 1967 வரையிலான அமெரிக்காவின் அரசியல் இராணுவ பங்கு குறித்து அமெரிக்க அரசின் இரகசிய தகவல்கள் அடங்கிய கோப்புகள் 1971-ல் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இந்த கருப்பொருளில் “தி போஸ்ட்” எனும் ஹாலிவுட் திரைப்ப்டம் வெளியானது குறிப்பிடத்தக்கது. டைம்சில் வெளியான தகவல்கள் படி நிக்சன் நிர்வாகம் எப்படி வியட்நாம் மோதலை அதிகப்படுத்தியது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

End of Vietnam War

வியட்நாம் போர் எப்போது முடிவுக்கு வந்தது?

ஜனவரி 1973-ல் அமெரிக்காவும் வடக்கு வியட்நாமும் இறுதியாக ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே உள்ள வெளிப்படையான பகைமையை முடிவுக்கு கொண்டு வந்தது. இருப்பினும் வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமுக்கு இடையேயான போர் ஏப்ரல் 30, 1975 வரை தொடர்ந்தது. வடக்கு வியட்நாம் படைகள் சைகோனைக் கைப்பற்றி அதற்கு ஹோ சி மின் நகரம் என்று பெயர் மாற்றியது. ஹோ சி மின் அவர்கள் 1969-ல் இறந்து போனார்.

இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவின் உதவியோடு நடத்தப்பட்ட இந்தப் போர் வியட்நாமின் மக்கள் தொகையில் பேரழிவான அழிவை ஏற்படுத்தியது. 20 இலட்சம் வியட்நாமிய மக்கள் போரில் கொல்லப்பட்டனர். முப்பது இலட்சம் மக்கள் காயமடைந்தனர். ஒரு கோடியே இருபது இலட்சம் மக்கள் அகதிகளானார்கள். அமெரிக்காவின் போர் வியட்நாம் நாட்டின் உள்கட்டமைப்பையும் பொருளாதாரத்தையும் அழித்துவிட்டது. இதன் பிறகான புனரமைப்பு மெதுவாகத்தான் ஆரம்பித்தது.

American soldiers after Vietnam war

வன்முறையும் கலவரமும்

இவ்வளவு இழப்பிற்கு பிறகு வியட்நாமின் கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவை ஓட வைத்ததோடு வியட்நாம் சோசலிச குடியரசு என்று இரண்டு வியட்நாம்களையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக 1976-இல் அறிவித்தார்கள். இருப்பினும் வியட்நாமில் முற்றிலும் அமைதி வந்து விடவில்லை. 15 ஆண்டுகள் ஆங்காங்கே வன்முறையும் கலவரமும் தொடர்ந்தன. முக்கியமாக அண்டை நாடுகளாக கம்போடியா மற்றும் சீனாவோடு முரண்பாடுகள் ஏற்பட்டன.

சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகள் வியட்நாமில் 1986-இல் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பிறகு பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பித்தது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியால் நாட்டின் அன்னியச் செலவாணி இருப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே வணிக மற்றும் ராஜதந்திர உறவுகள் 1990-களில் மீண்டும் ஏற்பட்டன.

1973-இல் கடைசி துருப்புகள் வியட்நாமிலிருந்து அமெரிக்கா திரும்பினாலும் போரின் விளைவுகள் அமெரிக்காவையும் பாதித்தன. 1965 முதல் 1973 வரையிலான வியட்நாம் போருக்காக அமெரிக்கா 120 பில்லியன் டாலரை செலவழித்த்து. இது அமெரிக்காவில் கடும் பணவீக்கத்தை ஏற்படுத்தியோடு 1973-ல் உலகளாவிய கச்சா எண்ணெய் நெருக்கடியை ஏற்படுத்தி எரிபொருள் விலை உயர்வுக்கு வழி வகுத்தது.

இந்தப்போர் அமெரிக்க மக்களிடையே உளவியல் ரீதியாக ஏற்படுத்திய விளைவுகள் இன்னும் ஆழமானவை. இந்தப் போர் அமெரிக்கா தோற்கடிக்க முடியாத நாடு எனும் பிம்பத்தை தகர்த்தது. அதே போன்று போருக்கு ஆதரவாகவும் முக்கியமாக எதிர்ப்பாகவும் நாட்டை இரண்டாக பிரிய வைத்தது. நாடு திரும்பிய அமெரிக்க வீர்ர்களை போரை ஆதரிப்போர் தோல்விக்கு காரணமானவர்கள் என்று எதிர்த்தனர். போரை எதிர்த்தவர்களோ அப்பாவி மக்களை கொன்ற கொலைகாரர்கள் என்று எதிர்த்தனர். இப்படி இரு தரப்பும் அமெரிக்க வீரர்களை எதிர்த்தன. அதே போன்று ஏஜெண்ட் ஆரஞ்சு எனும் நச்சு எரிபொருளை வியட்நாம் முழுக்க வீசி அந்நாட்டை சுடுகாடாக்கிய இராணுவத்தை போர் எதிர்ப்பாளர்கள் மன்னிப்பதாயில்லை.

Vietnam Veterans Memorial

வியட்நாம் படை வீரர் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது

1982-ம் ஆண்டில் தலைநகரம் வாஷிங்டனில் வியட்நாம் படை வீரர் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. அதில் போரில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன 58,200 வீரர்கள் பெயர்கள் இடம்பெற்றன. அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு போரிலும் இவ்வளவு வீரர்கள் கொல்லப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கணக்கெடுப்பின்படி, வியட்நாமில் பணியாற்றிய 30 இலட்சம் அமெரிக்க துருப்புக்களில் சுமார் 5,00,000 பேர் மனஉளைச்சலுக்கும் போருக்கு பிந்தைய மன அழுத்தக் கோளாறாலும் பாதிக்கப்பட்டனர். மேலும் விவாகரத்து, தற்கொலை, குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் போன்ற பிரச்சினைகள் படைவீரர்களிடையே குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தன.

வியட்நாம் போர் வரலாற்றிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் எந்த ஒரு சின்னநாட்டையும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் நினைத்தால் வென்று விட முடியாது என்பதே. வல்லரசு அகந்தையுடன் வியட்நாமை சில நாட்களில் பிடித்து விடலாம் என்று அமெரிக்கா மனப்பால் குடித்தது. மறுபுறம் வியட்நாம் கம்யூனிச கட்சி மரபு வழி ஆயுதங்களை வைத்தே அமெரிக்காவை போரில் வென்று காட்டியது. மேலும் வடக்கு வியட்நாமுக்கு ஆதரவாக முழு உலக மக்களும் குறிப்பாக அமெரிக்க மக்களும் போராடியது குறிப்பிடத்தக்கது.

முற்றும்

முந்தையப் பகுதியை படிக்க

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?