நாம் அணியும் தங்கம் விண்வெளியில் இருந்து வந்ததா? Twitter
உலகம்

நாம் அணியும் தங்கம் விண்வெளியில் இருந்து வந்ததா?

பூமியிலிருந்து மனிதர்களாகிய நாம் இதுவரை 1லட்சத்து 90 ஆயிரம் டன் தங்கம் வெட்டி எடுத்திருக்கிறோம். இன்னும் 50 ஆயிரம் டன்கள் மட்டுமே நாம் வெட்டி எடுக்க வேண்டும். தங்கத்தின் கதையை தெரிந்துகொள்ளுங்கள்!

Antony Ajay R

தங்கம் உலகிலேயே மதிப்புமிக்க உலோகமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்துக்கு அதிக மரியாதைக் கொடுக்கப்படுகிறது.

இந்திய கலாச்சாரம் தங்கத்தை மையப்படுத்தியே நகர்வதைப் பார்க்க முடியும். எல்லா விசேஷங்களிலும் எல்லாரும் தங்கம் அணிய விரும்புவர்.

இந்தியப் பெண்களுக்கு கோடிப் பூக்களை விட கிராம் தங்கம் தான் பெரிதாக தெரியும். அந்த அளவு தங்கத்தின் மீதான மோகம் நம் சமூகத்தில் இருப்பதைக் காணலாம்.

இந்து மற்றும் ஜெயின் மதங்களிலும் தங்கம் குறித்த பெருமைகள் இடம் பெறுகின்றன.

தங்கத்துக்கும் விண்வெளிக்கும் என்ன தொடர்பு?

மற்ற உலோகங்கள், தாதுக்கள் பூமியில் உருவாவதுப் போல தங்கம் உருவாவதில்லை.

தங்கம் தோன்ற மிகப் பெரிய அளவில் வெப்பமும் ஆற்றலும் தேவை.

அந்த அளவு அதிக ஆற்றல் நட்சத்திரங்கள் மரணிக்கும் போது உருவாகும் சூப்பர்நோவாவில் அல்லது இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் இணையும் போது தான் உருவாகும்.

இந்த தீவிர சூழல்களில் விரைவான நியூட்ரான்-பிடிப்பு செயல்முறை (rapid neutron-capture process) அல்லது ஆர்-செயல்முறை ( r-process ) எனும் நிகழ்வின் மூலம் கடினமான கூறுகள் (தங்கம்) உருவாகும்.

எளிமையாக, நட்சத்திரங்கள் மோதும் போது அல்லது வெடிக்கும் போது எண்ணிலடங்கா டிகிரி வெப்பநிலையில் உருவான சாம்பலே தங்கம்.

தங்கம், யுரேனியம் போன்ற கடினமான தனிமங்கள் கருந்துலையில் உருவாகலாம் என்றும் அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் கருந்துலையில் மிகப் பெரிய அளவில் மோதல்கள் மற்றும் வெடிப்புகள் நடக்கின்றன.

தங்கம் எப்படி பூமிக்கு வந்தது?

பூமி உருவாகும் போதே இப்போதுள்ள மொத்த தங்கமும் இருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதாவது பூமி உருவாகும் முன்பே நட்சத்திரங்களில் இருந்து தங்கம் இங்கு வந்து சேர்ந்திருக்கிறது.

புவியின் உருவாக்கத்தின் இரும்பு பேரழிவு (iron catastrophe) காலம் என ஒரு காலத்தை குறிப்பிடுவர்.

அதாவது 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியின் வெப்பநிலை கிட்டத்தட்ட இரும்பு உருகும் அளவுக்கு அதிகமாக இருந்ததாம்.

அந்த காலத்தில் தங்கம் உட்பட கடினமான பல உலோகங்கள் பூமிக்கு நடுவில் சென்றுவிட்டன என்கின்றனர். அதன் பின்னரே புவி உருவாகியிருக்கிறது.

புவியின் மேற்பரப்பில் எப்படி தங்கம் வந்தது?

200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருமளவில் விண்கற்கள் மற்றும் சிறு கோள்கள் புவியைத் தாக்கியிருக்கின்றன.

அப்போது தான் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் பூமிக்கு விண்கற்கள் மூலம் வந்து சேர்ந்திருக்கின்றன. அவை உருகி புவியின் மையத்துக்கும் சென்றன.

அதன் பிறகும் சிறிய கற்கள், சிறுகோள்கள் பூமியைத் தாக்கின. அப்போது மையத்திலிருந்த தங்கம் லேசாக மேல் மட்டத்துக்கு வரத் தொடங்கியிருக்கிறது என்கிறது Learn about gold வலைத்தளம்.

நிலப்பரப்பை பொறுத்தவரையில் எல்லா கண்டங்களிலும் தங்கம் இருக்கிறது.

நிலநடுக்கங்களும் தங்கம் மேற்பரப்புக்கு வர உதவியிருக்கின்றன.

இப்போது எவ்வளவு தங்கம் உலகில் உள்ளது?

பூமியிலிருந்து மனிதர்களாகிய நாம் இதுவரை 1லட்சத்து 90 ஆயிரம் டன் தங்கம் வெட்டி எடுத்திருக்கிறோம் என பிபிசி வலைத்தளத்தில் 2020ல் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுகிறது.

இதில் 60 விழுக்காடு மேற்பரப்பு சுரங்கங்களிலும் மீதம் நிலத்தடி சுரங்கங்களிலும் இருந்து எடுக்கப்படுகிறது.

அப்போதைய கணக்குப்படி இன்னும் 50 ஆயிரம் டன்கள் மட்டுமே நாம் வெட்டி எடுக்க வேண்டும். இந்த கணக்கு மாறலாம்.

இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட மொத்த தங்கத்தையும் சேர்த்தாலும் 4 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை மட்டுமே நம்மால் நிரப்ப முடியும்.

இவ்வளவு குறைவாக இருப்பதனால் தான் தங்கத்து இவ்வளவு அதிக மதிப்பு இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?