Travel: உலகின் இரண்டாவது பெரிய முருகன் சிலை அமைந்திருக்கும் Batu குகைகளை பற்றி தெரியுமா? twitter
உலகம்

Travel: உலகின் இரண்டாவது பெரிய முருகன் சிலை அமைந்திருக்கும் Batu குகைகளை பற்றி தெரியுமா?

இந்த முருகன் சிலை அமைந்திருக்கும் இடமானது பரவலாக பாட்டு குகைகள் (batu caves) என்று அறியப்படுகிறது.

Keerthanaa R

மலேசியாவில் அமைந்திருக்கும் முருகன் சிலையை பற்றி நாம் அனைவரும் அறிவோம். அந்த 42.7 அடி உயரம் உள்ள சிலையை, அஜித்தின் பில்லா படத்தில் பார்த்திருக்கிறோம் தானே?

இது உலகின் இரண்டாவது மிக உயரமான முருகன் சிலை.

இந்த முருகன் சிலை அமைந்திருக்கும் இடமானது பரவலாக பாட்டு குகைகள் (batu caves) என்று அறியப்படுகிறது.

இது இந்தியாவுக்கு வெளியே அமைந்திருக்கும் பிரபலமான இந்து புனிதத் தலங்களில் ஒன்று

பாட்டு குகைகள் சுண்ணாம்பு கற்களால் ஆனது. மலேசியாவின் கோம்பாக் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த குகைகளில் இந்துக் கோவில்கள் உள்ளன. இந்த கோவில் முருகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை

1800களில் தான் இது கோவில்களாக மாறின. அதற்கு முன்னர் தேமுவான் மக்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது. இவர்கள் ஒராங் அஸ்லி என்கிற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்

இந்த குகை வளாகத்தில் கோவில் குகை, temple cave என்ற ஒரு குகை உள்ளது. இங்கு 1890ஆம் ஆண்டு, கே. தம்புசாமி பிள்ளை என்ற தமிழ் வணிகர் ஒரு முருகன் சிலையை இங்கு பிரதிஷ்டை செய்தார். இதனை வழிபாட்டு தலமாகவும் மாற்றினார் என்று கூறப்படுகிறது அன்று முதல், ஆண்டுதோறும், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இங்கு தைபூச திருவிழா கொண்டாடப்படுகிறது. மலேசியா மட்டுமல்லாது உலகளவில் இருந்தும் தமிழர்கள் இங்கு விமர்சியாக நடைபெறும் திருவிழாவுக்கு வருகை தருகின்றனர்.

இந்த கோவில் குகை தான் மற்ற குகைகளை விடவும் பெரியது. இதனுள் இருக்கும் சுமார் 272 படிகளை ஏறிச் சென்று தான் இந்த குகைக்குள் இருக்கும் இந்துக் கோவில்களை நாம் பார்க்க முடியும்.

இந்த குகையை தவிர ராமாயண குகை, கலை மற்றும் வரலாற்றை பறைச் சாற்றும் அருங்காட்சியக குகை (museum cave), கலைக்கூட குகை ஆகியவையும் உள்ளன. இங்கு இது மதத்தின் முக்கிய கடவுள்களின் சிலைகள் ஓவியங்கள் நாம் பார்க்கலாம். ராமாயண குகை அதன் இதிகாசக் கதையை பேசுகிறது. மேலும் இங்கு 15 அடி உயரமுள்ள ஒரு அனுமன் சிலையும் உள்ளது.

இந்த பாட்டு குகைகள் ஆன்மீக பிரியர்கள் மட்டுமல்ல, அட்வென்சர் பிரியராக இருந்தாலும் பார்க்க சிறந்த இடம் தான். இவர்களுக்கு இந்த குகைகளில் வடகிழக்கு பக்கம் சாதகமானதாக இருக்கும். கிட்ட தட்ட 160 ஏறும் வழிகளை கொண்ட இந்த குகைகளை டமாய் குகைகள் என்று அழைக்கின்றனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?