Vladimir Putin

 

Twitter

உலகம்

ரசியாவின் எண்ணெய் வளம் எவ்வளவு தெரியுமா ? - வியக்க வைக்கும் தகவல்கள்

Govind

பொதுவில் ரசியாவை ஆற்றல் அல்லது எனர்ஜி வல்லரசு என்று அழைப்பார்கள். உலக அளவில் இயற்கை எரிவாயு இருப்பில் ரசியா முதலிடம் வகிக்கிறது. நிலக்கரி இருப்பில் உலக அளவில் இரண்டாம் இடத்திலும், கச்சா எண்ணெய் வள இருப்பில் உலக அளவில் எட்டாவது இடத்திலும் ரசியா இருக்கிறது.

Russia Oil Production

ஐரோப்பாவில் முதலிடம்


ஐரோப்பிய அளவில் எடுத்துக் கொண்டால் எண்ணெய்,எரிவாயு இருப்பில் ரசியாவே முதலிடம் வகிக்கிறது. உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ரசியா ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

ரசியாவின் பொருளாதாரம் பல துறைகளையும் கொண்ட ஒன்று. ஐரோப்பிய அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும் உலக அளவில் 11 வது பெரிய பொருளாதார நாடாகவும் இருக்கிறது. ரசியப் பொருளாதாரத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பங்கு முதன்மையானது. ரசியாவின் வருடாந்திர வரவு செலவு அறிக்கையின் படி 40% வருமானம் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மூலம் வருகிறது. ரசியாவுக்கு ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பங்கு 60% ஆகும்.

ரசியா தினசரி சராசரியாக 10.5 மில்லியன் பீப்பாய் எண்ணயயை உற்பத்தி செய்கிறது. வருடத்திற்கு 22.5 டிரில்லியன் கனசதுர அடி இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. ரசியா தனது உள்நாட்டு தேவைக்கு 3.7 மில்லியன் பீப்பாய்களை தினசரி நுகர்கிறது. மீதியை ஏற்றுமதி செய்கிறது.

Ukraine Russia war

சந்தை

ரசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியின் முக்கியச் சந்தை ஐரோப்பிய நாடுகளாகும். அல்லது எண்ணெய் - எரிவாயு மூலம் ரசியாவுக்கு கிடைக்கும் வருமானத்தின் ஆதாரம் ஐரோப்பிய நாடுகள்தான்.

ரசியாவின் எண்ணெய் உற்பத்தியை உள்ளூர் நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. ரசியாவின் 81% எண்ணெய் உற்பத்தியை Rosneft, Lukoil, Surgutneftegas, Gazprom, and Tatneft ஆகிய நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. ரசியாவின் எண்ணெய் வள இருப்பு சுமார் 80 பில்லியன் பீப்பாய்கள் என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

ரசியாவில் 25 க்கும் மேற்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அவை தினசரி 5.5 மில்லியன் பீப்பாய் எண்ணய்யை சுத்திகரிக்கும் திறனுள்ளவை. அதில் ரோஸ்நெஃப்ட் எனும் நிறுவனம் மட்டும் தினசரி இரண்டு மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை சுத்திகரித்து வருகிறது.

உலக அளவில் எண்ணெய் விநியோகத்தின் 10% பங்கை ரசியா கொண்டிருக்கிறது. தற்போது உக்ரைன் போர் காரணமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரசியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. இதன் மூலம் அமெரிக்காவில் கொஞ்சம் கவலைப்படத்தக்க அளவில் பெட்ரோல் விலை உயரும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணயின் 10% பங்கு ரசியாவிடம் இருந்து வருகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் ரசியாவிடம் இருந்து வருகிறது.

Russian Oil resources

எண்ணெய் ஏற்றுமதி

ஒபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு உக்ரைன் போரை ஒட்டி எண்ணைய் விலையையும், உற்பத்தியையம் சற்றே அதிகரித்திருக்கின்றன. ஒபெக் + எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் ரசியாவும் இருக்கிறது.

ரசியா தனது பொருளாதாரத்தில் கணிசமான பங்கை எண்ணெய், எரிவாயு ஏற்றுமதியில் இருந்து பெறுகிறது. அதே போன்று ஐரோப்பிய நாடுகள் தனது எண்ணெய் எரிவாயுவின் நுகர்வில் பெரும் பகுதியை ரசியாவிடம் இருந்து பெறுகிறது. இப்போது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை ரசியா மீது விதித்திருக்கின்றன. எனில் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்காது? அதற்கு மாற்று என்ன? ஒபெக் நாடுகள் மூலம் திடீரென்று உற்பத்தியை அதிகரித்து வாங்க முடியாது. அதே போன்று ரசியாவின் பொருளாதாரமும் எண்ணெய் எரிவாயு வருமானம் இன்றி நலிவடையும். இப்படி ஒருவருக்கொருவர் சார்ந்திருக்கும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் தடைகள் உண்மையில் எப்படி நீடிக்க முடியும் என்பது கேள்விக்குறி. அதே போன்று ரசியாவின் வருமானம் எண்ணெய் வர்த்தகம் மூலம் வருவதால் அந்நாட்டிற்கும் பிரச்சினைதான்.

இது போக உலக அளவில் எண்ணெய் விலை உக்ரைன் போரை அடுத்து ஏறிக் கொண்டே வருகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை என்பது இப்போது இல்லை.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?