நியூயார்க் முதல் ரோம் வரை: உலகின் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பணம் டிப்ஸ் ஆக கொடுக்கலாம்? ட்விட்டர்
உலகம்

நியூயார்க் முதல் ரோம் வரை: உலகின் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பணம் டிப்ஸ் ஆக கொடுக்கலாம்?

ஜப்பான் போன்ற சில நாடுகளில் டிப்ஸ் கொடுப்பதற்கு தடை இருக்கிறது. அதே சமயத்தில், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கலாச்சாரம் நம்மை அடையாளப்படுத்தும் பழக்கமாக பார்க்கப்படுகிறது.

Keerthanaa R

உணவகம், பார் போன்ற இடங்களுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வரும்போது நமக்கு சர்வ் செய்த சர்வருக்கு நாம் பணம் கொடுத்து விட்டு வருவோம். இதனை நாம் டிப்ஸ் என்று அழைக்கிறோம். அவர்கள் நமக்கு செய்த சேவைக்கு, நம் தரப்பில் இருந்து ஒரு நன்றியின் வெளிப்பாடு எனலாம்.

இந்தியாவில் இந்த டிப்பிங் கலாச்சாரத்தை நாம் பரவலாக பார்க்கலாம். ஆனால், ஜப்பான் போன்ற சில நாடுகளில் டிப்ஸ் கொடுப்பதற்கு தடை இருக்கிறது.

அதே சமயத்தில், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கலாச்சாரம் நம்மை அடையாளப்படுத்தும் பழக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த டிப்ஸ் வழங்குவது என்பது நாம் மொத்தமாக சாப்பிட்ட உணவின் பில்லில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அளிப்பதாகும்.

அப்படி, உலகின் எந்தெந்த நாடுகளில், எவ்வளவு டிப்ஸ் தரலாம்?

இந்த பதிவில்...

நியூயார்க்

நியூயார்க்கில் எந்த ஒரு உணவகத்துக்கு சென்று நாம் சாப்பிட்டாலும், குறைந்தது 20 சதவிகிதம் டிப்ஸ் வழங்கவேண்டும். சராசரியாக 20 முதல் 25 சதவிகிதம் வரை வழங்கலாம்.

20 சதவிகிதத்துக்கும் குறைவாக வழங்கிடக் கூடாது. அதே சமயத்தில் 22 சதவிகிதம் தரநிலையாக பார்க்கப்படுகிறது

மாட்ரிட்

இங்கு குறைந்தபட்சம் நமது பில்லில் இருந்து 5 முதல் 10 சதவிகிதம் வரை டிப்ஸ் கொடுக்கவேண்டும். பில்லில் சர்வீஸ் சார்ஜ் அரிதாக தான் சேர்க்கப்படுகிறது மாட்ரிட்டில். அதனால், அதனை சரிபார்த்துவிட்டு டிப்ஸ் கொடுக்கலாம்

பீஜிங்

இந்த சீன நகரில், டிப்ஸ் வழங்குவது ஒரு ரூடான நடத்தையாக பார்க்கப்படுகிறது.

ஊழியர்களின் மேலதிகாரிகளுக்கு தான் அவர்கள் செய்யும் வேலையை பொறுத்து ஒருவருக்கு எவ்வளவு டிப்ஸ் வழங்கவேண்டும் என்பதை முடிவுசெய்யும் உரிமை இருக்கிறதாம்

லண்டன்

இங்கும் பெரிதாக டிப்ஸ் வழங்குவதை ஊழியர்கள் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், 10 முதல் 15 சதவிகிதம் குறைந்தபட்ச அளவாக இருக்கிறது.

லண்டனிலும் ஒரு சில உணவகங்களில் 12.5 சதவிகிதம் சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதனை பில்லில் சரிபார்த்து டிப்ஸ் வழங்குங்கள்

சிட்னி

இங்கு ஊழியர்களுக்கு தேவையான ஊதியம் வழங்கப்படுவதால், யாரும் டிப்ஸ் எதிர்பாப்பதில்லை. ஆனால், வழங்குவதாக இருந்தால் அதன் வரையறை 10 சதவிகிதம்

ரோம்

ரோம் நகரின் உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுப்பதாக இருந்தால், அதற்கான வரம்பு 5 முதல் 10 பர்சண்ட் வரை

பாரிஸ்

காதலின் நகரமான இங்கும் டிப்ஸ் வழங்க தரநிலை அளவு 5 முதல் 10 சதவிகிதம் தான். ஒரு வேளை உங்களுக்கு சர்வ் செய்தவரின் சேவை உங்களை அதிகமாக இம்பிரெஸ் செய்திருந்தால் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீங்கள் டிப்ஸ் வழங்கலாம்

டொக்கியோ

ஜப்பானில் டிப்ஸ் வழங்கும் கலாச்சாரம் இல்லை! தப்பி தவறியும் கொடுத்துவிடாதீர்கள். அப்படி வழங்கினால், அது நமக்கு சேவை செய்தவரை அவமதிக்கும் செயலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?