நம்மில் பலருக்கு வங்கிகளில் புதிய கணக்கு துவங்குவது அல்லது தேவையற்ற வங்கி கணக்குகளை மூடுவது போன்ற வேலைகள் வந்தாலே மிகப்பெரும் தலைவலியாக தோன்றும். காரணம் அதற்கான வங்கி நடைமுறைகளை பின்பற்றுதலில் நமக்கு இருக்கும் அறியாமையும் சோம்பலும்தான் காரணம். ஆனால் ஐக்கிய அமீரகத்தில் ஒருவர் தங்களது வங்கி கணக்கை மூட வேண்டும் என்றால் இந்த எளிய முறைகளை பின்பற்றினால் போதும்.
Dubai, Arab Emirates
• உங்களுடைய புகைப்படம்
• உங்களுடைய வங்கி தொடர்பாக உங்களிடம் இருக்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்
• உபயோகிக்கபடாமல் உங்களிடம் மீதமிருக்கும் செக் மற்றும் செக்புக்
• முதலில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதையும் எடுக்க வேண்டும். நேரடியாக உங்கள் வங்கியில் இருந்து முழுப்பணத்தை எடுத்து கொள்வது அல்லது உங்களது பணத்தை பிறரின் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்வது போன்ற வழிமுறைகளை பின்பற்றி கொள்ளலாம். உங்களது பணம் முழுவதையும் எடுத்து முடித்தவுடன் வங்கி கணக்கை மூடுவதற்கான விண்ணப்ப படிவத்திற்கு கோரிக்கை விடுக்க வேண்டும்.
• எந்த வகையான வங்கி கணக்கை வைத்திருக்கிறீர்கள் மற்றும் எந்த காரணத்திற்காக வங்கி கணக்கை மூட வேண்டும் என விண்ணப்பித்திருக்கிறீர்கள் போன்ற அடிப்படை கேள்விகள் அந்த விண்ணப்ப வடிவத்தில் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தை நிரப்பிய பிறகு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய கவுண்டரில் உங்களின் அடையாள சான்றுகளுடன் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
• பின்னர் உங்களின் டெபிட் கார்டு, உபயோகிக்கப்படாத செக்குகள் போன்றவற்றை வங்கியிடம் திரும்ப செலுத்த வேண்டும். ஒருவேளை உங்களால் இவற்றை திரும்ப செலுத்தமுடியாத பட்சத்தில் அமீரக வங்கி (Emirates NBD) விதிமுறைகளின்படி சம்பந்தபட்டவரின் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற அனைத்தும் டிஆக்டிவேட் செய்யப்படும்.
இந்த மூன்று நடைமுறைகளும் முடிந்த பின்னர் உங்களுடைய வங்கி கணக்கு மூடப்பட்டதற்கான உறுதிப்படுத்தபட்ட தகவல் உங்களது இமெயில் மூலமோ அல்லது பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புவது மூலமாகவோ தெரிவிக்கப்படும். வங்கி கணக்கை மூடுவதற்கான இந்த 3 நடைமுறைகளையும் முழுவதுமாக முடிப்பதற்கு 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும்.
ஒருவேளை நீங்கள் அமீரக நாடுகளிலிருந்து நிரந்தரமாக வெளியேறுகிறீர்கள் என்றால், "நீங்கள் எந்தவொரு கடனுக்கும் உட்பட்டவர் அல்ல என்பதையும், எந்தவொரு பண பரிவர்த்தனைக்கும் பொறுப்பற்றவர் என்பதையும் உறுதிசெய்யும் விதமாக “clearance மற்றும் no liabilities சான்றிதழ்களை பெற்றுகொள்ளலாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust