ஜெலன்ஸ்கி
ஜெலன்ஸ்கி  Facebook
உலகம்

உளவு விமானம், ரகசிய ரயில் - ரஷ்யா கண்ணில் மண்ணை தூவி USA சென்ற Ukraine அதிபர் ஜெலன்ஸ்கி

NewsSense Editorial Team

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கிய போர் கிட்டத்தட்ட 10 மாதங்களைத் தொட்டுவிட்டது.


இந்த கோரப் போர் காரணமாக உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி எளிதில் வெளிநாடுகளுக்கு எல்லாம் செல்ல முடியாமல் தன் நாட்டுக்குள்ளேயே இருப்பதை நாம் அறிவோம்.


ஆனால் சில தினங்களுக்கு முன், உக்ரைன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கி அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டி சிக்கு அமெரிக்க விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அமெரிக்க அதிபரையும் சந்தித்துப் பேசியுள்ளார். 


செலென்ஸ்கியை கழுகு போல கண்காணித்து வரும் ரஷ்ய துருப்புகளுக்கு மத்தியில் எப்படி அமெரிக்காவுக்குச் சென்றார்? அவர் மேற்கொண்ட பயண வழித்தடம் என்ன?

அமெரிக்க அழைப்பு:

உக்ரைன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கியை அமெரிக்க அதிபர் சந்திப்பது தொடர்பாக கடந்த பல மாதங்களாக விவாதிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வார காலமாகவே இது தொடர்பான செய்திகளும் வெளியாகி வந்தன. டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு அதிபர்களும் பேசிக் கொண்டதாகவும், சுமார் 3 நாட்களுக்குப் பிறகு செலென்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் முறையாக அழைப்பு விடுத்தார் என்கிறது பிபிசி வலைதளம். 

ஆனால் கடந்த புதன்கிழமை காலை வரை இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை. சொல்லப்போனால் உக்ரைன் அதிபர் அமெரிக்காவுக்கு பயணப்படுவதைக் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் கொடுக்கப்படவில்லை. 

போரில் ஈடுபட்டிருக்கும் நாட்டின் அதிபர் அமெரிக்காவுக்கு வருவதால் அவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் என்பதால் எவருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை என சில வலைதளங்கள் சொல்கின்றன.

எப்படிப் பயணித்தார் செலென்ஸ்கி:

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும் என்பதால், உக்ரைன் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்தி பறப்பதற்கு பதிலாக ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது. 

உக்ரைன் நாட்டில் உள்ள கிழக்கு எல்லைப் பகுதிக்கு கடந்த செவ்வாய்கிழமை சென்று பார்வையிட்ட செலென்ஸ்கி, ரகசியமாக சுமார் 12 மணி நேரம் பயணிக்க வேண்டிய போலாந்து நாட்டுக்கு செல்லும் ரயில் பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு போலாந்து நாட்டில் Przemysl என்கிற எல்லை நகரத்தைச் சென்றடைந்தவர், அதே ரயில் நிலையத்தில் நடந்து வருவது போன்ற காணொளிகள் கடந்த புதன்கிழமையே வெளியாயின. அதன் பிறகு அமெரிக்க அரசு அதிகம் பயன்படுத்தும் கருப்பு நிற செவ்ரொலெட் சப் - அர்பன் கார்களில் பயணித்தார்.

பல மேற்கத்திய நாட்டுத் தலைவர்கள் உக்ரைனில் உள்ள கைவ் நகரத்துக்கு ரயிலில் பயணித்து, அதிபர் செலென்ஸ்கியைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் உக்ரைந் அதிபர் செலென்ஸ்கி இப்போது தான் முதன்முறையாக போருக்கு இடையில் வெளிநாட்டுக்குச் சென்று அமெரிக்க அதிபரைச் சந்தித்துள்ளார் என பல சர்வதேச செய்தி வலைதளங்கள் சொல்கின்றன.

அதன் பிறகு, போலாந்து நாட்டின் Rzeszow விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க விமானப் படையின் US Air Force Boeing C - 40B விமானத்தில் அமெரிக்காவுக்கு பறக்கத் தொடங்கினார் செலென்ஸ்கி. 

பாதுகாப்பு காரணங்களுக்காக செலென்ஸ்கி பயணித்த விமானம் பிரிட்டனில் தரையிறங்கியது. வடக்குக் கடலில் ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில், ஒரு நேட்டோ உளவு விமானம் ஒட்டுமொத்த கடற்பரப்பையும் பரிசோதித்து, பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, அவ்விமானம் மீண்டும் பறக்கத் தொடங்கியது.

இங்கிலாந்து விமானப் படைத் தளத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்காவின் F - 15 போர் விமானம், செலென்ஸ்கி பயணித்த விமானத்துக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் உடன் பயணித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 

சீக்ரட் சர்வீஸ் பாதுகாப்பு

கடைசியாக சுமார் 10 மணி நேர விமானப் பயணத்துக்கு பிறகு, டிசம்பர் 21ஆம் தேதி உக்ரைன் அதிபர் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன்னைச் சென்றடைந்தார்.  

அங்கு அவருக்கு சீக்ரட் சர்வீஸ் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் செலென்ஸ்கிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் என்பதால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

உக்ரைன் அதிபரைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்றார். ரஷ்யாவின் மோசமான தாக்குதலை எதிர்த்து உக்ரைன் மற்றும் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பாதுகாப்புக் பணிகள் தொடரும் என்றார் ஜோ பைடன்.

உக்ரைன் நாட்டின் அதிபர் என்கிற முறையில் என்னால் 'வெறும் அமைதி' என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உக்ரைன் நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பிய பிறகு தான் போர் நிறுத்தம் ஒரு முடிவுக்கு வரும். அதோடு ரஷ்யாவினால் உக்ரைனில் ஏற்பட்ட சேதங்கள் அனைத்துக்கும் ரஷ்யா பதில் கூற வேண்டும் என்றும் கூறினார் செலென்ஸ்கி.

இந்த சந்திப்பு எல்லாம் சுமூகமாக நிறைவடைந்த பிறகு, வியாழக்கிழமை அன்றே உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ஐரோப்பா சென்றடைதுவிட்டார். போலாந்து நாட்டு அதிபர் Andrzej Dudaவைச் சந்தித்துப் பேசினர்.

அதன் பிறகே வொலொடிமைர் செலென்ஸ்கி தன் சொந்த நாடான உக்ரைனுக்குச் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் பாதுகாப்பாக கைவ் நகரத்துக்குச் சென்றடையும் வரை அமெரிக்க பாதுகாப்புப் படையினரின் பணி நிறைவடையாது என்றும் கூறப்படுகிறது. விரைவில் உக்ரைன் ரஷ்யா போர் ஒரு முடிவுக்கு வரும் என நம்புவோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?