உலகின் முதல் முத்தம்: 4,500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் முதன் முதலில் முத்தமிட்டானா?  Canva
உலகம்

உலகின் முதல் முத்தம்: 4,500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் முதன் முதலில் முத்தமிட்டானா?

மனிதன் முதன் முதலில் முத்தமிட்ட நிகழ்வு 4,500 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம் என புதிய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

Keerthanaa R

உலகில், மனிதனின் முதல் முத்தம் 4,500 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அன்பின் வெளிப்பாடாக முத்தத்தை நாம் பார்க்கிறோம். எல்லா உறவுகளுமே, குறிப்பாக காதலர்கள் தங்களின் ஆழமான அன்பை வெளிகாட்ட முத்தமிடுகின்றனர்.

அறிவியல் ரீதியாகவும் முத்தமிடுவதால் மனிதர்களுக்கு உடல் ரீதியில் நன்மைகள் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனிதன் முதன் முதலில் முத்தமிட்ட நிகழ்வு 4,500 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம் என புதிய ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

சயின்ஸ் என்ற பத்திரிக்கையில், இந்த ஆராய்ச்சியின் தரவுகள் வெளியாகியிருந்தன. மருத்துவ வரலாற்று நிபுணரும், கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் கியூனிஃபார்ம் நிபுணருமான டாக்டர் டிரொயெல்ஸ் அர்பால் என்பவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

ஆராய்ச்சியில் கிடைத்த, கழிமண்ணால் ஆன கற்சிலைகளில், மனிதன் முத்தமிட்டதற்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன. அதில் கியூனிஃபார்ம் என்ற மொழியில் இது குறித்து எழுதப்பட்ட சான்றுகளும் கிடைத்துள்ளன.

கியூனிஃபார்ம் என்பது பண்டைய மெசபடோமியா நகரின் மொழியாகும்.

கிடைக்கப்பெற்ற அந்த கிலே கற்சிலையில், ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிடுவது தெரிகிறது.

இந்த கற்சிலை சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது. இதுவே உலகில் மனிதன் முத்தமிடுவான் என பதிவு செய்யப்பட்ட முதல் சான்று. அதற்கு முன்னரே கூட மனிதர்கள் முத்தமிடும் பழக்கத்தை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக முத்தமிடுதல், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ மட்டும் நடக்கவில்லை, வெவ்வேறு கலாச்சாரங்களில் இந்த பழக்கம் இருந்ததாகவும் அந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியை மேற்கொண்ட டாக்டர் டிரொயெல்ஸ் அர்பால் இது குறித்து கூறுகையில், “பழங்காலத்தில், காதலர்களின் நெருக்கமான உறவுக்கு முத்தமிடுதல் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கப்பட்டது. எனவே முத்தமிடுதல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோன்றி, பின்னர் எல்லா இடங்களுக்கும் பரவிய ஒரு பழக்கம் என குறிப்ப்பிட முடியாது” என்றார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?