பசிக்கொடுமை : "பத்தில் ஒருவருக்கு உணவில்லை" - அதிர வைக்கும் உணவுப்பற்றாக்குறை அறிக்கை! Hunger / Canva
உலகம்

பசிக்கொடுமை : "பத்தில் ஒருவருக்கு உணவில்லை" - அதிர வைக்கும் உணவுப்பற்றாக்குறை அறிக்கை!

கொரோனா தொற்றுப்பரவலுக்கு முன்பு இருந்ததை விட பசிக்கொடுமை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 34.5 கோடி மக்கள் நேரடியாக உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இது 2021ம் ஆண்டை விட 20 கோடி அதிகம்.

Antony Ajay R

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு ஏஜென்சி உலகம் முழுவதும் 70 கோடி மக்கள் பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் கூறியுள்ளது.

மனிதாபிமானம் நலிவடைந்துவரும் சூழலில் அடுத்த வேளை உணவு குறித்து நிச்சயமற்ற சூழலில் வாழும் மக்களின் விகிதம் அதிகரித்திருக்கிறது என்று ஏஜென்சி கூறியுள்ளது.

உலக மக்கள் தொகையில் பத்தில் ஒருவர் தினமும் இரவு பட்டினியுடன் உறங்கச் செல்வதாக உணவு பற்றாக்குறைக்கான உலகளாவிய அறிக்கை சொல்கிறது.

ஏஜென்சியின் கூற்றுப்படி, கொரோனா தொற்றுப்பரவலுக்கு முன்பு இருந்ததை விட பசிக்கொடுமை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 34.5 கோடி மக்கள் நேரடியாக உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். இது 2021ம் ஆண்டை விட 20 கோடி அதிகம்.

பசிக்கொடுமை

இந்த நிலைக்கு வன்முறை, பொருளாதார நிலையற்றத் தன்மை, தீவிர வானிலை, இயற்கை பேரிடர்கள் போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.

மனிதாபிமான தேவைகளுக்கான நெருக்கடியுடன் நாம் வாழ்ந்துவருகிறோம் என்று ஏஜென்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜனவரி - ஜூன் 2023 இடைப்பட்ட காலத்தை கணக்கில்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா, சூடான், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், ஏமன், பங்களாதேஷ், பாகிஸ்தான், தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய 10 நாடுகள் இந்த பிரச்னையில் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்கா பசிக்கொடுமை நிறைந்த பிராந்தியமாக இருந்து வருகிறது. இலங்கை, நைஜர் போன்ற நாடுகள் கடந்த ஆண்டைவிட முன்னேற்றம் கண்டுள்ளன.

பசிக்கொடுமை நிறைந்துள்ள 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின் மூலம் சர்வதேச அளவில் உடனடியாகவும் நீண்டகால நோக்கிலும் பசிக்கொடுமைக்கு தீர்வுகாண வேண்டியதன் அவசரம் வெளியுலகுக்கு சொல்லப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?