Imran Khan

 

Twitter

உலகம்

பாகிஸ்தான் என்ன உங்கள் அடிமையா - இந்தியாவிடம் இப்படி கேட்க முடியுமா ? இம்ரான் கண்டனம்

Newsensetn

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் மேற்கு நாடுகள் கொடுத்த அழுத்தத்தை கண்டித்து பாகிஸ்தான் என்ன உங்கள் அடிமையா என்று அந்நாட்டு அதிபர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் 12 வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இதையடுத்து உக்ரைன் நாட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.அங்குள்ள மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடத்திற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

உக்ரைன் நாடு கடும் சேதத்தை அடைந்த போதிலும், உக்ரைன் தங்கள் வழிக்கு வராத காரணத்தினால் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.ரஷ்யாவின் படையெடுப்புக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஐ.நா.வில். ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்புக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் உட்பட 22 தூதரக பணிகளின் தலைவர்கள் கடந்த மார்ச் 1ம் தேதி கூட்டு கடிதத்தை வெளியிட்டிருந்தனர்.

முன்னதாக ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட 34 நாடுகள் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேற்கு நாடுகளின் கடிதம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சூடான பதில் அளித்துள்ளார்.

Narendra Modi

அரசியல் பேரணி ஒன்றில் பங்கேற்ற இம்ரான்கான், ”எங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் அடிமைகளா... நீங்கள் என்ன சொன்னாலும் செய்வோம் என்று எண்ணுகிறீர்களா. ஐரோப்பிய யூனியன் தூதர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்: நீங்கள் இந்தியாவுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளின் ராணுவ நடவடிக்கைகளை ஆதரித்ததால் பாகிஸ்தான் கடுமையான பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட இம்ரான் கான், 'நாங்கள் ரஷ்யாவுடன் நண்பர்களாக இருக்கிறோம், அமெரிக்காவுடன் நாங்கள் நண்பர்கள்; நாங்கள் சீனாவுடனும் ஐரோப்பாவுடனும் நண்பர்கள்; நாங்கள் எந்த முகாமிலும் இல்லை' என்று கூறினார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?