சதுரமான சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்! - எப்படி வேலை செய்கிறது? Twitter
உலகம்

சதுரமான சக்கரங்களைக் கொண்ட சைக்கிள்! - எப்படி வேலை செய்கிறது?

இயற்பியல் விதிகளின் படி இப்படியான சதுரமான சக்கரம் சாத்தியமில்லை என்றாலும் கொஞ்சம் கிரியேட்டிவாக யோசித்து இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளார் செர்ஜி என்ற இஞ்சினியர்.

Antony Ajay R

சதுரமான சக்கரங்களைக் கொண்ட சைகிளை ஒருவர் ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சதுரமாக சக்கரங்களா? என ஆச்சரியமாக இருக்கிறதா? சதுரமாக இருப்பதைச் சக்கரம் என்றுக் கூறுவது சரியா என்ற சந்தேகமே சிலருக்கு இருக்கலாம்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமாக தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக சக்கரங்கள் வட்டமாக மட்டுமேதான் இருக்கும். அப்படி இருந்தால் தான் அதனால் சரியாக இயங்க முடியும்.

வட்ட சக்கரத்தை கண்டுபிடித்ததை மனிதர்கள் செய்த சாதனையாகவே கருதலாம். ஏனெனில் போக்குவரத்து எளிதான பின்பு தான் மனித நாகரீகம் அடுத்தக்கட்டத்தை அடைந்தது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய வடட சக்கரம் அதே தொழில்நுட்பங்களில் உதவியோடு சதுரமாக மாறியிருக்கிறது.

எப்படி உருவானது இந்த சைக்கிள்?

Q என்ற பொழுதுபோக்கு யூடியூப் சேனலை வைத்திருக்கிறார் செர்ஜி கோர்டியேவ் என்ற இஞ்சினியர். இவர் புதுமையான பல விஷயங்களைத் தயாரிக்கிறார்.

இவர்தான் சதுரமான சக்கரங்களைக் கொண்ட சைக்கிளை உருவாக்கி அதனைச் செயல்படவும் வைத்துள்ளார். இவரது கண்டுபிடிப்பு இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயற்பியல் விதிகளின் படி இப்படியான சதுரமான சக்கரம் சாத்தியமில்லை என்றாலும் கொஞ்சம் கிரியேட்டிவாக யோசித்து இதனைச் சாத்தியப்படுத்தியுள்ளார் செர்ஜி.

எப்படி செயல்படுகிறது?

செர்ஜியும் வட்டச்சக்கரத்தைப் போல சுற்றக்கூடிய சதுரத்தை படைக்கவில்லை. ஆனால் ஒரு சதுரமான சட்டத்தை உருவாக்கி அதனைச் சிறப்பாக சுற்றும்படி மாற்றியுள்ளார்.

இந்த சைக்கிளின் சதுர சக்கரத்தின் மேல்புறத்தில் உள்ள பெல்ட் மட்டுமே சுற்றுகிறது. பீரங்கி முதலான வாகனங்கள் இப்படிச் செயல்படுவதைப் பார்த்திருப்போம்.

இதற்கு முன்னரும் சில சதுரமான சக்கரம் உள்ள சைக்கிள்களை சிலர் வடிவமைத்திருந்தாலும் இது கச்சிதமாக இருக்கிறது!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?