ராஜபக்‌ஷே

 

Twitter

உலகம்

இலங்கை : இந்தியா வழங்கி உள்ள 7600 கோடி ரூபாய் - விரிவான தகவல்கள்

மினு ப்ரீத்தி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, இந்தியா கடந்த வியாழன் அன்று இலங்கைக்கு ஒரு பில்லியன் (1 Billion USD) அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக அறிவித்தது.

கடன் வரியை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சொன்னது, “இந்தியா எப்போதுமே இலங்கை மக்களுடன்தான் நிற்கிறது. மக்களுக்குத் தேவையான இலங்கை நாட்டிற்குச் சாத்தியமான அனைத்து ஆதரவையும் இந்தியா எப்போதும் வழங்கும்” என்றார்.

வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில், “உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி உதவி பயன்படுத்தப்படும்” என்றார்.


“இந்தியா எப்பொழுதும் இலங்கை மக்களுடன்தான் நிற்கிறது, இந்தத் தருணத்தில் நாங்கள் தொடர்ந்து அனைத்து ஆதரவையும் இலங்கைக்கு வழங்குவோம் என்றும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்” எனக் கூறினார் அரிந்தம் பாக்சி.

இந்தியா - ஶ்ரீலங்கா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மூலம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர், கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இலங்கை நிதி அமைச்சரான பசில் ராஜபக்சே நேரில் பார்த்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜபக்சே முன்னிலையில்தான் கையெழுத்து விழா நடைபெற்றது.

கடந்த மாதம், இந்தியா இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது. கடுமையான அந்நியச் செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியில் இலங்கை தத்தளித்து வரும் நிலையில், பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா, இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியது.

கடந்த ஆண்டு டிசம்பரில் அமைச்சர் ராஜபக்சேவின் புது தில்லி பயணத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட நான்கு தூண் பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பாட்டின் முக்கிய அங்கமாக ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுக்கப்பட்டது. “உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு இந்தக் கடன் வசதி நீட்டிக்கப்பட்டது “ என இலங்கை உயர் ஆணையம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப்பொருட்கள்

கையெழுத்திடும் விழாவிற்கு முன்னதாக, திரு ராஜபக்சேவை திருமதி சீதாராமன் மற்றும் திரு ஜெய்சங்கரும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக வரவேற்றனர். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, “இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலப் பொருளாதார ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை அமைக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன” என உயர் ஆணையம் கூறுகிறது.

முந்தைய நாள், திரு ராஜபக்சே அமைச்சர் ராஜ் குமார் சிங்கை சந்தித்து, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றியும் கலந்து ஆலோசித்தார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?