முகமது பின் சல்மான் மற்றும் மோடி Twitter
உலகம்

முகமது நபிகள் | இந்தியா Vs அரபு உலகம்: என்ன நடக்கிறது? அ முதல் ஃ வரை - முழுமையான தகவல்கள்

NewsSense Editorial Team

இஸ்லாமிய மதத்தின் இறைதூதர் முகமது நபிகள் குறித்து சில பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மோசமாகப் பேசியதை பல்வேறு அரபு உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன.

அது குறித்த முழு விவரத்தையும் இந்த இணைப்புகளில் பார்க்கலாம்

இணைப்பு 1: https://www.newssensetn.com/india/bjp-leader-insults-prophet-mohammad

இணைப்பு 2: https://www.newssensetn.com/world-news/saudi-joins-gulf-fury-over-prophet-remarks

பாஜக மூத்த நிர்வாகிகள் முகமது நபியைக் குறித்துப் பேசிய மோசமான கருத்துகள் இந்திய இஸ்லாமியர்களைத் தாண்டி, அரபு தேசங்களில் வசிக்கும் இஸ்லாமியர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அவர்களின் கோபத்தைக் குறைக்க, அரபு நாட்டு அரசாங்கங்கள் இந்தியா மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரபு நாடுகளின் ஊடகங்களில், இந்த செய்தி தொடர்ந்து தலைப்புச் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, வெளியுறவு விவகாரங்களில் புதிய பாய்ச்சலைக் காட்டி வரும் இந்தியா, முகமது நபிகள் சர்ச்சையில் மிக நிதானமாகக் கையாள்வது ஏன்?

இந்தியா முழுக்க பல்வேறு பிரிவினைவாத நிகழ்வுகள், மதரீதியிலான சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது கூட, அரபுலக கண்டனங்களை ஆற்றுப்படுத்தும் விதத்தில், தயக்கமின்றி இந்தியா அனைத்து மதங்களையும், அனைத்து நம்பிக்கை சார்ந்த மனிதர்களையும் பெரிதும் மதிப்பதாகக் கூறுவது ஏன்? அரபு உலகத்துக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?

Arab in Map

வணிகம்

ஜி சி சி என்றழைக்கப்படும் Gulf Cooperation Council என்கிற அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் குவைத், கத்தார், சௌதி அரேபியா, பஹரைன், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளோடு பெரிய அளவில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறது இந்தியா.

2020 - 21 ஆண்டில் சுமார் 87 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வியாபாரம் நடந்துள்ளதாக பிபிசி வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தோடு free trade agreement கையெழுத்திட்டுள்ளது. ஒட்டுமொத்த ஜி சி சி அமைப்போடும் இந்த ஒப்பந்தத்தைப் போட்டுக் கொள்ள ஆவலோடு காய் நகர்த்தி வருகிறது இந்தியா. ஒருவேளை ஜி சி சி அமைப்பு இதற்கு ஒப்புக் கொண்டால் இன்னும் பல பில்லியன் டாலருக்கு இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும்.

Gulf Cooperation Council

அந்நிய செலாவணி

ஒருநாட்டின் கடன் மதிப்பு, பொருளாதார நிலை, நம்பி ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு எல்லாம் பலமான அந்நிய செலாவணி கையிருப்பு இருக்க வேண்டும்.

குவைத், சௌதி அரேபியா, பஹரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் லட்சக் கணக்கான இந்தியர்கள் உதவியாளர் பணி தொடங்கிப் பெரு நிறுவனங்களில் உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள், ஆலோசகர்கள் எனப் பல பணிகளில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்துக்கான சம்பளம் அரபு நாடுகளில் இருக்கும் நிறுவனங்களால் தான் வழங்கப்படுகின்றன. அந்த பணம் தான், இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி கஜானாவைக் கணிசமாக நிறைத்துக் கொண்டிருக்கிறது.

எரிசக்தியின் மூலாதார வினியோகம்

இந்தியா போன்ற வளரும் நாட்டுக்கு எரிசக்தி எத்தனை அவசியமானது என்பதைத் தனியே குறிப்பிட வேண்டுமா என்ன? தினமும் லட்சக் கணக்கான பேரல் கச்சா எண்ணெய் இந்த அரபு உலக நாடுகளிடமிருந்து தான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

ராஜ்ஜிய உறவுகள்

2015ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், 2016ஆம் ஆண்டு சௌதி அரேபியா, இரான், கத்தார் 2018 & 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம்... எனப் பல முறை பல்வேறு அரபுலக நாடுகளுக்குப் பயணப்பட்டுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

Arabia

இதற்கு எரிசக்தி ஒத்துழைப்பு தொடங்கி, ராஜரீக ரீதியிலான உறவு, சர்வதேச அரசியல், வெளியுறவுத் துறைக் கொள்கை எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. சுருக்கமாக, இந்தியாவின் வளர்ச்சிக்கு அரபுலக நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

சீனாவை எதிர்கொள்ள, இரானோடு நட்புறவை நல்லபடியாகப் பேணிக்காக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, இரானோடு அத்தனை பிரமாதமான உறவில் இல்லை. இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொஸ்ஸின் அமிர் அப்தொல்லாஹியன் இந்தியா வரவிருக்கிறார். இந்த நேரம் பார்த்து பாஜக மூத்த நிர்வாகிகள் இப்படி நபிகளைக் குறித்து மோசமாகப் பேசியது இச்சந்திப்பைப் பாதிக்கலாம் அல்லது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது. தலைமை மட்டத்தில் உளமாற எடுக்கும் நடவடிக்கைகள் தான் அரபு உலகத்தில் இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் சரிவை சரிக்கட்ட உதவும் என, இந்தியா சார்பாக பல்வேறு அரபு நாடுகளில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ராஜரீக அதிகாரியான அனில் திரிகுனயாத் பிபிசியிடம் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஜி சி சி அமைப்புக்கு இடையிலான உறவு இரு தரப்புக்கும் மிகவும் அவசியமான ஒன்று என வில்சன் சென்டரின் ஆசிய திட்டத்தின் இணை இயக்குநர் மைக்கேல் குகெல்மென் (Michael Kugelman) கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?