Indian Man Relocated To Canada To Work At Meta, Fired Two Days After Joining Twitter
உலகம்

Meta: வேலைக்காக இந்தியாவில் இருந்து கனடா சென்ற நபர் - இரண்டே நாளில் லே ஆஃப் செய்த நிறுவனம்

Gautham

இந்திய சமூகத்தைப் பொறுத்த வரை ஒருவர் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்லூரிகளில் சேர்ந்துவிட்டாலே அவர்களுக்கான பாதை கிடைத்துவிட்டது, இனி அவர்கள் வாழ்கையில் திரும்பிப் பார்க்க எதுவும் இல்லை என்று கூறுவர்.

ஆனால் ஐஐடி கரக்பூரில் படித்து முடித்துவிட்டு, கனடா நாட்டில் உள்ள மெடா (ஃபேஸ்புக்) நிறுவன அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார் ஹிமான்சு என்கிற இளைஞர். எதிர்பாராத விதமாக மெடா நிறுவனத்தில் இருந்து இரண்டே நாளில் லே ஆஃப் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தன் லிங்க்ட் இன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டு, வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் இருந்தால் குறிப்பிடுமாறு பதிவு செய்துள்ளார் ஹிமான்சு.

meta

"நான் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு இடம் பெயர்ந்து மெடா அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இரண்டே நாட்களில் மெடா உடனான என் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. மெடா நிறுவனம் மேற்கொண்ட லே ஆஃப் திட்டத்தில் நானும் பாதிக்கப்பட்டேன். அடுத்து என்ன என்பது குறித்து உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியவில்லை. எதிர்வருபவைகளுக்காக காத்திருக்கிறேன்" என உருக்கமாக லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு கனடா அல்லது இந்தியாவில் மென்பொருள் பொறியாளருக்கான காலிப் பணியிடங்கள் இருந்தாலோ, ஆட்கள் எடுக்கிறார்கள் என்றாலோ தெரியப்படுத்துங்கள் என்றும் வெளிப்படையாகக் குறிப்பிட்டு உதவி கேட்டுள்ளார் ஹிமான்சு.

இவரின் பதிவு லிங்க்ட் இன் தளத்திலேயே காட்டுத் தீ போலப் பரவி வருகிறது. கிட்டத்தட்ட 7,000 ரியாக்‌ஷன் இவரின் பதிவுக்குக் கிடைத்திருக்கிறது. இவருக்குப் பல பயனர்களும் ஆறுதல் கூறி, வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

உங்கள் வாழ்கையில் மிக இளம் வயதிலேயே லே ஆஃபை எதிர்கொண்டதற்கு என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன், அதுவும் மெடாவில் சேர்ந்து சில நாட்களிலேயே லே ஆஃப் செய்யப்பட்டது வருத்தத்துக்குரியது, நம்பிக்கையை கைவிடாதீர்கள் என ஒரு பயனர் ஆறுதல் கூறியுள்ளார்.

ஒரு சிலர் மெடா நிறுவனத்தையும் கடுமையாக சாடி வருகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் மெடா போன்ற ஒரு பெரு நிறுவனத்திடம் சரியான நிதியோ, திட்டமிடலோ இல்லை என்பதையே காட்டுகிறது. எப்படி ஒரு நபரை வேலைக்கு எடுத்துவிட்டு, இரண்டே நாட்களில் அவரை பணியிலிருந்து லே ஆஃப் செய்ய முடியும்? எப்படி ஒரு குறைந்தபட்ச தொலைநோக்குப் பார்வை இல்லாமல் ஒருவரைப் பணியில் அமர்த்த முடியும் என ஒரு பயனர் மெடாவை விமர்சித்து இருந்தார்.

11,000 பேர் லே ஆஃப்

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா, தன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எண்ணிக்கையாக 11,000 பேரை வேலையிலிருந்து லே ஆஃப் செய்துள்ளது. செப்டம்பர் 2022 நிலவரப்படி மெடாவில் சுமார் 87,000 ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர். மெடா நிறுவனத்தின் முக்கிய வியாபாரத்திலேயே பல சவால்களை எதிர்கொள்வதால் இப்படி ஊழியர்களை லே ஆஃப் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதோடு மெடா நிறுவனம் அதிக பொருட்செலவில், ஒரு எதிர்கால உறுதியற்ற "மெடாவெர்ஸ்" தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதும் இதற்கு ஒரு காரணம் எனலாம். இதோடு மெடா நிறுவனத்தில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக மெடா தரப்பிலிருந்து தெரியப்படுத்தியுள்ளார்களாம்.

எதிர்காலத்திலும், சில அணிகள் வளரும் என்றும், மற்ற பல அணிகள் பெரிய மாற்றம் இல்லாமல் தொடரும் அல்லது அணிகளில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என மெடா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் மெடா நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக (2020, 2021, 2022) சுமார் 42,340 பேரை வேலையில் சேர்த்துள்ளது. இதில் இந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 15,350 பேரை பணியில் அமர்த்தியுள்ளது மெடா நிறுவனம். இப்படி கடந்த சில ஆண்டுகளில் ஆட்களை எடுக்கும் போதே சற்று கவனித்து ஆட்களை எடுத்திருந்தால், 11,000 பேரை தற்போது லே ஆஃப் செய்யாமல் தடுத்திருக்கலாம் என பல டெக்கிகள் மற்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். மற்றொரு தரப்போ இதில் மெடா நிறுவனத்தை மட்டும் குறை சொல்வதில் பொருளில்லை, பொருளாதாரச் சூழல்கள் சரியில்லை என்கிறார்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?