Starbucks சி இ ஓ ஆக பதவியேற்ற இந்தியர் - யார் இந்த லக்ஷ்மன் நரசிம்மன்? twitter
உலகம்

Starbucks CEO ஆக பதவியேற்ற இந்தியர் - யார் இந்த லக்ஷ்மன் நரசிம்மன்?

Keerthanaa R

உலக பெரு நிறுவங்களை ஆளும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் இணைந்திருக்கிறார் லக்ஷ்மன் நரசிம்மன்.

இவர் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் அடுத்த CEO-ஆக பதவியேற்றிருக்கிறார்.

இனி ஸ்டார்பக்ஸின் போர்ட் ஆஃப் டிரெக்டர்ஸ் குழுவிலும் அங்கம் வகிக்கப்போகிறார் லக்ஷ்மன்.

ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷன் வாஷிங்டனில் உள்ள சியாட்டிலை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க பன்னாட்டு காஃபிஹவுஸ் சங்கிலி ஆகும்.

முன்னாள் சி இ ஓ ஹாவர்ட் ஷுல்ட்ஸ் பதவி விலகிய பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்டார்பக்ஸ் சி இ ஓ வாக லக்ஷ்மன் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன் ரெக்கிட் நிறுவனத்தின் சி இ ஓவாக பதவி வகித்து வந்த லக்‌ஷ்மன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பதவியை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஏற்கவுள்ளார்.

லக்‌ஷ்மன் நரசிம்மன் மே மாதம் 1967ல் பிறந்தவர். இந்தியாவின் பூனே நகரம் இவரது சொந்த ஊர். பூனே இஞ்சினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தார்.

பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மற்றும் இண்டெர்னேஷனல் ஸ்டடீஸில் முதுகலை பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் எம் பி ஏ படித்தார் லக்ஷ்மன்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது கனெக்டிகட் மாகாணத்தில் வசித்து வருகின்றனர், லக்ஷ்மனுக்கு மொத்தம் 6 மொழிகள் தெரியும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக உலகின் பிரபலமான, தலைச்சிறந்த நிறுவனங்களை வழிநடத்திவருகிறார் லக்ஷ்மன். செப்டம்பர் 2019ஆம் ஆண்டு ரெக்கிட் பென்கிசர் என்ற பிரிட்டிஷ் நிறுவனத்தின் சி இ ஓ ஆக பதவியேற்றார்.

ரெக்கிட் டெட்டால், ஹார்பிக், லைசால் உள்ளிட்ட சுகாதாரம், உடல்நலம் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

2012 முதல் 2019 வரை பெப்சிகோவை தலைமைத் தாங்கி வழிநடத்தி வந்தார் லக்ஷ்மன். இந்நிறுவனத்தின் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளை இவர் நடத்தி வந்தார்.

பெசிக்கோவுக்கு முன் மெக்கின்சே அண்ட் கம்பனியின் இயக்குநராக பதவி வகித்தார் லக்ஷ்மன். கிட்ட தட்ட 19 ஆண்டுகள் இங்கு பணியாற்றியவர் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவில் நுகர்வோர் பொருட்கள், சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் உள்ள நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?