இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. தீவிரவாத காலிஸ்தான் அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் என்ற தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணுன் கனடாவில் இருக்கும் இந்தோ - கனடிய இந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பண்ணுன் வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர், "இந்தோ-கனடிய மக்களே, நீங்கள் கனடாவுக்கும் கனட அரசியலமைப்புச் சட்டத்துக்கும் விசுவாசமாக இருக்கவில்லை. உங்கள் இலக்கு இந்தியா. கனடாவை விட்டு வெளியேறுங்கள், இந்தியாவுக்கு செல்லுங்கள்" எனப் பேசியிருந்தார்.
"காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் எப்போதும் கனடாவுக்கு நேர்மையாக இருக்கின்றனர். அவர்கள் கனடாவின் பக்கமே நிற்கின்றனர். எப்போதும் கனட அரசியலமைப்பை நிலைநிறுத்தியிருக்கின்றனர்" எனவும் பேசியுள்ளார்.
காலிஸ்தான் ஆதரவு சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பிருக்கிறது என அதிர்ச்சியளிக்கும் விதமாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசினார். இதற்கு அடுத்த நாள் பண்ணுனின் வீடியோ வெளியாகியிருக்கிறது.
கனட பிரதமர்
ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கு இந்திய உயர் அதிகாரி வர்மா பொறுப்பாளியா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த கனடிய சீக்கியர்கள் அனைவரும் வான்கோவெர் என்ற இடத்துக்கு அக்டோபர் 29ம் தேதி வர வேண்டும் எனவும் குர்பத்வந்த் சிங் பண்ணுன் கோரியுள்ளார்.
இதுபோன்ற பொது வாக்கெடுப்புகளை பலமுறை கனடாவில் உள்ள காலிஸ்தானி அமைப்புள் செய்துள்ளன. இது குறித்து இந்தியா, கனட அரசிடம் கவலை தெரிவித்ததுடன், வாக்கெடுப்புகளை நிறுத்தவும் கேட்டுகொண்டுள்ளது. இந்திய தலைவர்களையும் தூதர்களையும் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டியிருக்கின்றனர்.
ஒரு வாரத்துக்கு முன்னர் குர்பத்வந்த் சிங் பண்ணுன் பிரதமர் மோடி, அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோரை அச்சுறுத்தும் விதமாக பேசியிருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust