16,000 அடியில் ஏடிஎம், உயரமான மலைகள், முதல் நீதிபதி- பாகிஸ்தான் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்  twitter
உலகம்

16,000 அடியில் ATM, உயரமான மலைகள், முதல் நீதிபதி- பாகிஸ்தான் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்று முதல் மிக பெரிய கோட்டையை கொண்ட நாடு என்பது வரை, பாகிஸ்தான் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்

Keerthanaa R

பாகிஸ்தான் என்ற நமது அண்டை நாட்டை பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? பெரும்பாலும், கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போதும், இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படும்போதும் மட்டும் நாம் அந்த நாட்டை நினைக்கிறோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவிலிருந்து பிரிந்து, இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக மாறியது பாகிஸ்தான். பாகிஸ்தான் உலகின் ஐந்தாவது அதிக மக்கள் தொகை உள்ள ஒரு நாடு, இரண்டாவது அதிக இஸ்லாமிய மக்கள் தொகை உள்ள நாடு. இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் உருது மற்றும் ஆங்கிலமாகும்.

லாகூர் கோட்டை, நீலம் பள்ளத்தாக்கு, ஹுன்ஸா பள்ளத்தாக்கு ஃபைசல் மாஸ்க் உள்ளிட்டவை பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள்.

உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்று முதல் மிக பெரிய கோட்டையை கொண்ட நாடு என்பது வரை, பாகிஸ்தான் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.

பழமையான நாகரிகங்களில் ஒன்று

உலகின் மிக பழமையான மற்றும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாகரிகங்களில் ஒன்று சிந்து சமவெளி நாகரிகம். பாகிஸ்தான் இந்த சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்

உலகின் மிக இளமையான நோபல் விருதாளர்

பாகிஸ்தான் என்றது நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று மலாலா யூசஃப்சாய். தனது 15 வயதில் பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் மலாலா.

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை தலிபான்கள் சுட்டனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் மலாலா. அதன் பிறகு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது .

மிக உயரமான ஏடிஎம்:

காரகோரம் நெடுஞ்சாலையை கடந்தால், பாகிஸ்தான் சீன எல்லையில் அமைந்திருக்கும் குன்கிராப் கணவாயை அடையலாம்.

இங்கு தான் உலகின் மிக உயரமான ஏடிஎம் அமைந்திருக்கிறது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் ஆன இது, 16,007 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

முதல் ஆண்டி வைரஸ் - Brothers, Inc.

நாம் கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவாமல் இருக்க ஆண்டிவைரஸ் பயன்படுத்துவோம். உலகின் முதல் ஆண்டிவைரஸை உருவாக்கிய பெருமை பாகிஸ்தானுக்கே சேரும்.

பசித் மற்றும் அம்ஜத் அல்வி சகோதரர்கள் இணைந்து 1986 ஆம் ஆண்டு ஐபிஎம் கம்ப்யூட்டர்களுக்காக ஆண்டி வைரஸ் கண்டுபிடித்தனர்.

ப்ரெயின் என பெயரிடப்பட்ட இந்த ஆண்டி வைரஸ் அவர்களது கணினியிலிருந்து மெடிக்கல் சாப்ட்வேர் திருடப்படாமல் இருக்க உருவாக்கப்பட்டது. மற்ற கம்ப்யூட்டர்களுக்கு இவை ஒத்துபோகவில்லை.

உயரமான மலைகள்:

உலகின் இரண்டாவது உயரமான மலை என்றறியப்படும் கே 2 (காட்வின் ஆஸ்டின்) இங்கு தான் அமைந்துள்ளது. இமய மலைத் தொடர்களின் பகுதியான கே 2 மலைச் சிகரம் சீனா இந்தியா ஆகிய நாடுகள் வரை நீள்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மலைச்சிகரமான திரிச் மீர், இந்து குஷ் உள்ளிட்ட மலைகளை அடக்கியது பாகிஸ்தான்.

உலகின் மிக இளைய சிவில் நீதிபதி:

உலகின் மிக இளம் சிவில் நீதிபதியான முகமது இல்யாஸ் பாகிஸ்தானை சேர்ந்தவர். இவர் தனது சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றபோது இவருக்கு வயது 20 வருடம் ஒன்பது மாதங்கள்.

மிகப்பெரிய துறைமுகம்:

பலுசிஸ்தான் உலகின் மிகப்பெரிய ஆழ்கடல் இயற்கை துறைமுகமாகும். ஹார்முஸ் ஜலசந்தியின் முக்கிய கடல் பாதை வழியாக மேற்கு சீனாவிற்கும் மற்றும் மத்திய ஆசியாவின் நாடுகளுக்கும் இந்த துறைமுகம் நுழைவாயிலாக இருக்கும்.

கால்பந்து உற்பத்தி

பாகிஸ்தானின் சியால்கோட் கால்பந்துகளை தயாரிக்கிறது. உலகின் பாதிக்கும் அதிகமான கால்பந்து உற்பத்தி சியால்கோட்டில்தான் நடக்கிறது.

நான்காவது பெரிய நீர்ப்பாசன திட்டம்

விவசாயத்தை பெரிதும் நம்பியிருக்கும் பாகிஸ்தான், வாழ்வாதாரத்தை காக்க பரந்து விரிந்த, கடினமான நீர்ப்பாசன திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தில் 202,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை பயிரிடமுடியும்.

சாங்கா மாங்கா காடு

சாங்கா மாங்கா காடு உலகின் மிக பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட காடாகும். எண்ணிலடங்கா தாவர வகைகள், 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 27 பூச்சி வகைகள் இந்த காட்டில் இருக்கின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?