இங்க கையால சாப்பிட்டா குத்தமா? உலக நாடுகளும் உணவு பழக்கங்களும் ! canva
உலகம்

இங்க கையால சாப்பிட்டா குத்தமா? உலக நாடுகளும் உணவு பழக்கங்களும் !

Keerthanaa R

ஒரு நாட்டின் கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை பற்றி பேசும் போது நிச்சயமாக உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நாம் இருக்கும் இடத்தின் புவியியல் எல்லைகளுக்கு ஏற்றவாறு நமது பிரதான உணவு வகை என்று ஒன்று இருக்கும்.

அப்படியே நாடு நகரங்கள் விரிவடைய, பன்னாட்டு உணவு வகைகளையும் நாம் சாப்பிட தொடங்கியிருக்கிறோம். இதனால் ஒரு சில பழக்க வழக்கங்களையும் நாம் பின்பற்ற தொடங்கியிருக்கலாம்.

உதாரணத்திற்கு இந்தியாவில் உணவை கையில் சாப்பிடும் பழக்கம் பிரதானமாக இருந்தாலும், சில உணவுகளை நாம் ஸ்பூன் அல்லது ஃபோர்க் வைத்து சாப்பிடுவோம். இது மேஜை நாகரிகமும் கூட.

ஆனால், ஒரு சில நாடுகளில் இந்த உணவை சாப்பிடும்போது வினோத பழக்கங்களை பின்பற்றுகின்றனர். அவற்றைக் குறித்து இந்த பதிவில் காணலாம்...

நோ உப்பு, நோ பெப்பர்

நாம் ஒரு உணவகத்திற்கு சென்றால் மேசையில் இரு கண்ணாடி குவளைகள் இருக்கும். ஒன்றில் உப்பும் மற்றொன்றில் மிளகு பொடியும் இருக்கும். பொதுவாக சூப் போன்றவற்றை சாப்பிடும்போது சால்ட் அண்ட் பெப்பர் போட்டுக்கொள்வோம். மேசையில் இல்லை என்றால் கேட்டு வாங்குவோம்.

வீட்டிலும் அப்படி தானே? உப்பு போதவில்லை என்றால் கேட்டு வாங்கி சாப்பிடுவது வழக்கம்

ஆனால் எகிப்து மற்றும் போர்ச்சுகலில் உணவில் உப்பு காரம் போதவில்லை என்றால் கேட்கக்கூடாது. அது சமைத்தவரை அவமானப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது.

ஐ காண்டாக்ட்

மேலை நாடுகளில் டோஸ்ட் என்ற வழக்கம் உண்டு. திருமணம், இரங்கல் போன்ற முக்கிய நிகழ்வுகளில் ஒருவரைப் பற்றிய நல்ல நினைவுகளை பகிர்வதே டோஸ்ட் முறையாகும்.

பொதுவாக கையில் வைன் அல்லது ஏதாவது ஒரு மதுபானத்துடன் தங்களின் உரையை வழங்கிவிட்டு சியர்ஸ் சொல்லி அந்த பானத்தை அருந்துவார்கள்.

அப்படி ஆஸ்திரியாவில் இந்த டோஸ்ட் செய்து முடித்தவுடன் யாருக்காவது சியர்ஸ் சொன்னால், அவர்களுடைய கண்களில் கண்கள் பார்க்கவேண்டும். அதாவது ஐ காண்டாக்ட் செய்யவேண்டும். இல்லை என்றால் அது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

கைகளை பயன்படுத்தக் கூடாது

உணவை கையில் சாப்பிடுவது இந்தியாவின் பாரம்பரியம். அறிவியல் ரீதியாகவும் இது நம் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பழக்கம் என்று சான்றுகள் உள்ளன.

ஆனால் சிலி நாட்டில் உணவை கையில் சாப்பிடவே கூடாதாம். ஸ்பூன், அல்லது ஃபோர்க் அல்லது கத்தியை பயன்படுத்தி தான் சாப்பிடவேண்டும்.

அங்குள்ள மக்கள் உணவை கையில் சாப்பிடக்கூடாது என்று நம்புவது தான் இதற்கு முக்கிய காரணம்.

டீ குடிக்கலாமா வேணாமா?

பிரிட்டன் நாட்டின் உணவு பழக்கத்தில் தேநீருக்கு சிறப்பு இடமுண்டு. இந்த டீயை குடிப்பதில் சில கண்டிஷன்கள் அங்கு இருக்கிறது.

கோப்பையில் தேநீர் ஊற்றி அதை கலக்கினோம் என்றால், நாம் பயன்படுத்தும் ஸ்பூன்கள் அந்த கோப்பையின் ஓரங்களில் படக்கூடாது. அதே போல சர்க்கரை கலங்கிய பின்னர் அந்த ஸ்பூனை நிச்சயமாக சாசரில் தான் வைக்கவேண்டும்.

உணவு ருசியா இருக்கா?

ஜப்பானில் ஒரு வினோத வழக்கம் உண்டு. நாம் சாப்பிடும் உணவு மிகவும் ருசியாக இருந்து அது நம் மனதை இதமாக்கினால், நாம் அதை சத்தமாக உறிஞ்சி சாப்பிடவேண்டும்.

மேலும், சூஷி உணவை சாப்பிடவும் சில கண்டிஷன் உண்டு.

முழு சூஷியையும் சாஸில் நனைக்ககூடாது. மீன் இருக்கும் பகுதியை மட்டும் தான் சாஸ் தொட்டு சாப்பிடவேண்டும். மீன் இருக்கும் பகுதிதான் நாக்கில் படும் வண்ணம் உணவை வாயில் போடவேண்டும்.

க்ளீன் பிலேட்

இந்தியாவில் நமக்கு பறிமாறப்பட்ட உணவை முழுவதுமாக சாப்பிடும் வழக்கம் மிக முக்கிய நாகரிகமாக பார்க்கப்படுகிறது. இது உணவு ருசியாக இருந்ததை காண்பிக்கிறது. குறிப்பாக, நமக்கு உணவு வழங்கியவருக்கு செய்யும் மரியாதை நிமித்தமான செயலும் கூட

ஆனால், சீனாவில் உங்களுக்கு அளிக்கப்பட்ட உணவை முழுவதுமாக சாப்பிட்டால் அது அவமானமாக பார்க்கப்படுகிறது

பெரியவர்கள் தான் ஃபிர்ஸ்ட்

தென் கொரியாவில் நாம் உணவு சாப்பிட உட்காரும்போது, வயதில் மூத்தவர் தான் முதலில் உணவை சாப்பிடவேண்டும். இது அவர்களுக்கு நாம் வழங்கும் மரியாதையாக பார்க்கப்படுகிறது

சீஃபுட்டுடன் சீஸா?

இத்தாலி அதன் உணவுகளுக்காக பிரபலம். குறிப்பாக சீஸ் வகைகளுக்கு. ஆனால் இங்கு நாம் சீஃபுட் சாப்பிடுகிறோம் என்றால் மட்டும் அதனுடன் சீஸை சேர்க்கக்கூடாது. இது உணவை கெடுக்கும் செயலாகும்.

மேலும் உங்கள் உணவுக்கு சீஸ் வழங்கப்படாவிட்டால் அதை நீங்கள் கேட்கவும் கூடாது

மேலும் இத்தாலியில், ஒரு உணவை சாப்பிட்டவுடன் பால் சேர்த்திருக்கும் எந்த பானத்தையும் அருந்தக் கூடாது.

சாப்ஸ்டிக்ஸ்

சீனாவில் உணவு சாப்பிட பயன்படுத்தும் கருவிகளுள் முதன்மையானது சாப் ஸ்டிக்ஸ். இதனை பயன்படுத்தி தான் நூடுல்ஸ், சூஷி போன்ற உணவுகளை சாப்பிடுகின்றனர்.

ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் இந்த சாப் ஸ்டிக்குகளை நேராக வைக்க கூடாது. இது அவமரியாதையான செயல்

இடது கை பழக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் உணவை இடது கையில் சாப்பிடுவது வினோத பழக்கமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவை போலவே இங்கும் வலது கையில் தான் சாப்பிடவேண்டும்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?