வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரம் ஒன்று இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விளம்பரம் இனவெறியை தூண்டுவதாக இருக்கிறது என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணியமர்த்தும்போது சில விதிமுறைகளை அல்லது தங்களது எதிர்பார்ப்புகளை விளம்பரப்படுத்துவது வழக்கம்.
இந்த கண்டிஷன்களை எல்லாம் பூர்த்தி செய்து, அந்த வேலையில் அமர்வது சவாலான ஒன்று தான். ஆனால் சில சமயங்களில் நிறுவனங்கள் விதிக்கும் கண்டிஷன்கள் வரம்பை மீறியதாக இருக்கின்றன.
ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் விளம்பரமும் அப்படித்தான் இருக்கிறது. விளம்பரத்தின் புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவை தலைமையிடமாக கொண்டுள்ள ஆர்த்தர் கிராண்ட் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் டெக்சாஸ் மாகாணக் கிளையில் பிசினஸ் அனலிஸ்ட் என்ற பதவிக்கு ஆள் சேர்ப்பதாக விளம்பரம் வெளியாகியிருந்த்தது.
அதில், வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள்,
அமெரிக்காவில் பிறந்திருக்கவேண்டும் (வெள்ளை நிறந்த்தவர்கள்), டாலஸிலிருந்து 60 மைல் தூரத்தில் தங்கியிருக்கவேண்டும் என்றிருந்தது.
இந்த விளம்பரத்தின் புகைப்படம் ரெட்டிட் மற்றும் ட்விட்டர் தளங்களில் பரவியது
இந்த விளம்பரம் இனவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது என இணையவாசிகள் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust