சவுதி, ஈரான் : 7 ஆண்டுகள் பகையை சமாதானம் செய்த சீனா - அமெரிக்காவுக்கு ஆபத்தா?  Twitter
உலகம்

சவுதி, ஈரான் : 7 ஆண்டுகள் பகையை சமாதானம் செய்த சீனா; அமெரிக்காவுக்கு ஆபத்தா?

Antony Ajay R

பல ஆண்டுகள் பகையை முடிவுக்கு கொண்டுவரும்விதமாக சவுதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகள் தங்கள் உறவைத் தொடர முடிவு செய்துள்ளன.

இதனால் மத்திய கிழக்கில் நீண்ட நாட்கள் நிலவிவந்த பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏமன் முதல் சிரியா வரை போர்களை ஏற்படுத்திய விரோதம் நிறைவடைகிறது என்றும் கூறலாம்.

இரண்டு நாடுகளும் இதற்கு சம்மதிக்க வைக்க சீனா முயற்சிகளை மேற்கொண்டதாக ராய்டர்ஸ் செய்திதளம் கூறுகிறது.

பெய்ஜிங்கில் ரகசியமாக கடந்த நாட்களில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த தலைமை பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக மீண்டும் தெஹ்ரானும், ரியாத்தும் அரசாங்க நட்புறவை காப்பாற்றவுள்ளன. இரண்டு மாதங்களில் தூதரங்களை மீண்டும் திறக்கவும் முடிவு செய்துள்ளன.

சீனா, சவுதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, "இரண்டு நாடுகளும் பரஸ்பரம் இறையாண்மைகளை மதிக்கவும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன."

2016ம் ஆண்டு சவுதி அரேபியாவில் ஷியா முஸ்லீம் மதகுரு ஒருவர் தூக்கிலிடப்பட்டார். இதனால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தில் கலவரம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பிறகு இரண்டு நாடுகளும் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டன.

2019ம் ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் மூலம் தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் எனக் கூறியது சவுதி அரேபியா. ஆனால் இதனை ஈரான் மறுத்தது.

ஏமனில் ஈரான் துணையுடன் செயல்படும் ஹவுதி இயக்கமும் சவுதி அரேபிய எல்லையில் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை போடப்பட்ட ஒப்பந்தத்தில் 2001ஆம் ஆண்டின் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தொடரவும் மற்றும் சில வர்த்தக, பொருளாதார மற்றும் முதலீடு தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தை பேச்சு வார்த்தை மற்றும் அமைதியின் வெற்றி எனக் கூறியுள்ளது சீனா. மேலும் சீனா உலகளாவிய பிரச்னைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றும் எனவும் சீனாவின் ராஜதந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்கத் தரப்பு, "சவுதி அரேபியா பெய்ஜிங்கில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து தொடர்ந்து வெள்ளை மாளிகையில் தெரிவித்து வந்தது. அமெரிக்கா இதில் நேரடியாக ஈடுபடவில்லை." எனக் கூறியுள்ளது.

வாஷிங்டன் ஏமனில் போரை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு தகவல் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

மறுபக்கம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றது முதலே அமெரிக்கா - சவுதி அரேபியா உறவு பலவீனமானதாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சவுதியின் மனித உரிமைகள் பதிவு, ஏமன் போர், ரஷ்யா உடனான உறவு மற்றும் ஓபெக்+ எண்ணெய் உற்பத்தி போன்றவை இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.

நேர்மாறாக சீனாவுடன் சவுதியின் உறவு இன்னும் நெருக்கமானதாக ஆகியிருக்கிறது. சவுதியின் மிகப் பெரிய தலைவர்கள் சீனாவுக்கு பயணங்களை மேற்கொள்கின்றனர். சீனாவின் தலைவராக ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக வென்ற பின்னர் சவுதி - ஈரான் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?