Sara Khadem Twitter
உலகம்

ஈரான்: ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை - நாடு திரும்பக் கூடாது என மிரட்டல்

Priyadharshini R

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் விளையாடிய வீராங்கனை ஒருவரை நாடு திரும்பக் கூடாது என தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததையடுத்து அவர் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மாஷா அமீனி என்கிற 22 வயது இளம்பெண், தன் தலை முடியை ஹிஜாப் அணிந்து மூடவில்லை என்கிற காரணத்தால் கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்டு, மர்மமான முறையில் இறந்து போனார்.

இது பொது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி பின் போராட்டமாக வெடித்தது. போராட்டத்தில் இதுவரை சுமார் 326 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 43 குழந்தைகள் மற்றும் 25 பெண்கள் அடக்கம் என்கிறது ஈரான் மனித உரிமைகள் குழு.

தி ஹியூமன் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் நியூஸ் ஏஜென்சி என்கிற மனித உரிமைகள் அமைப்போ, இதுவரை 344 போராட்டக்காரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதில் 52 பேர் குழந்தைகள் என்றும் கூறுகிறது.

இந்த நிலையில் ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் விளையாடிய வீராங்கனை ஒருவரை நாடு திரும்பக் கூடாது என தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததையடுத்து அவர் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார்.

கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் போட்டியில் வீராங்கனை சாரா காதெம் பங்கேற்றார். ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் விளையாடிய காரணத்திற்காக நாடு திரும்பக் கூடாது என சாராவுக்கு போன் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவரது குடும்பத்திற்கும் மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சாரா ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இதற்கு முன் ஈரானிய வீராங்கனையான எல்னாஸ் ரெகாபி ஹிஜாப் இல்லாமல் தடையேறுதல் போட்டியில் பங்கேற்றதற்காக அவரது வீட்டை அதிகாரிகள் சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?