இஸ்ரேல் : பாலும் தேனும் ஓடும் நாடு என அறியப்படுவது ஏன்? Twitter
உலகம்

இஸ்ரேல் : பாலும் தேனும் ஓடும் நாடு என அறியப்படுவது ஏன்?

யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என மூன்று மதத்தவருக்கும் ஆபிரகாம் முதல் தீர்கதரிசியாக இருக்கிறார். பழைய ஏற்பாட்டின் படி பால் என்பது ஆட்டின் பாலைக் குறிக்கும். தேன் என்பது சிலனைக் குறிக்கும்.

Antony Ajay R

இஸ்ரேல் ஒரு சர்ச்சைக்குரிய நிலப்பகுதியாக வரலாறு நெடுகிலும் இருந்திருக்கிறது. நமக்கு அந்த நிலப்பகுதி குறித்து தெரியாத விஷயங்கள் பல இருக்கின்றன.

யூதர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என மூன்று மதத்தவருக்கும் எருசலேம் முக்கியத்துவம் பெற்ற நகரமாக திகழ்கிறது. ஆபிரகாமை முதல் தீர்கதரிசியாக மூன்று மதத்தவரும் கருதுகின்றனர்.

பைபிளின் பழைய ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் யூதர்களும் பகிர்ந்துகொள்கின்றனர். தொடக்க நூல், விடுதலை பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச்சட்டம் (உபாகமம்) ஆகிய ஐந்து புத்தகங்களையும் ஹீப்ரூ பைபிளில் தோரா (The Torah) என அழைக்கின்றனர்.

தோரா இஸ்ரவேலை அல்லது இஸ்ரேலை பாலும் தேனும் ஓடும் நிலம் எனக் கூறுகிறது. முதல் 5 புத்தகங்களில் 14 முறை இஸ்ரேல் இப்படி வர்ணிக்கப்பட்டுள்ளது.

பழைய ஏற்பாட்டின் படி பால் என்பது ஆட்டின் பாலைக் குறிக்கும். தேன் என்பது சிலனைக் குறிக்கும். பேரிச்சை பழத்தில் இருந்து எடுக்கப்படும் அடர்த்தியான இனிப்பான சாறு சிலன் (Silan). இந்த சாற்றை தயாரிக்க இஸ்ரேலை பூர்வீகமாகக் கொண்ட ஏழு வகையான பேரீச்சம்பழங்களில் ஒன்று தேவை.

பாலும் தேனும் ஓடும் நிலம் என்று குறிப்பிடுவது கிறிஸ்தவத்திலும் இன்னும் சில கலாச்சாரங்களிலும் சுதந்திரத்தையும் புதிய வாழ்வையும் குறிப்பிடுவதாக இருக்கிறது. குழந்தை பிறந்ததைக் கொண்டாட ஒரு ஸ்பூன் பாலும் தேனும் கொடுக்கும் வழக்கம் சில இடங்களில் பின்பற்றப்படுகிறது.

இந்த நிலத்தை யூதர்கள் அடையும்போது இது கிட்டத்தட்ட பாழாகியிருந்தது. குடியேற்றங்கள் அதிகரித்தப்பிறகு நிலத்தையும் பண்படுத்தினர். நவீன காலத்தில் மொத்த இஸ்ரேலும் வளமான மண்ணாக இருக்கிறது. செர்ரி தக்காளியும் சிட்ரஸ் பழங்களும் காய்கறிகளும் செழித்து வளருகின்றன.

இவற்றுடன் இஸ்ரேலின் விஸ்கியும் பிரபலமான ஒன்றாகும். உண்மையில் பாலும் தேனும் ஓடும் நாடு என பைபிள் குறிப்பிடுவது பொருத்தமானதே!

"தேவன் தம்முடைய ஜனங்களை எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து ஒரு செழிப்பான தேசத்திற்குக் கொண்டுவந்தார், அது அவர்களுக்கு சுதந்திரத்தையும் ஆசீர்வாதத்தையும் உறுதியளித்தது." என இஸ்ரேல் குறித்து பைபிள் குறிப்பிடுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?