Is this cave the subterranean portal to Mayan culture?  Twitter
உலகம்

இந்த குகை மாயன் நாகரிகத்திற்கு நிலத்தடி நுழைவாயிலா? நதி குகைக்கு செல்ல தயாரா?

பெலிஸின் இந்த குகை உங்களை பண்டைய மாயாவின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த குகையில் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மாயன் நாகரிகத்துக்கு தொடர்புடைய தொல்பொருள் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

Priyadharshini R

அமெரிக்காவின் பெலிஸ் எனும் இடத்தை பற்றி நாம் நினைக்கும் போது, ​​முதலில் நினைவுக்கு வருவது அழகிய கடற்கரைகள். ஆனால் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் இந்த பார்டன் க்ரீக் குகை.

பெலிஸின் ஆழமான காட்டில் உள்ள இந்த பார்டன் க்ரீக் குகை ஒரு புவியியல் அதிசயமாகவும் சுவாரஸ்யமான தொல்பொருள் தளமாகவும் திகழ்கிறது.

பெலிஸின் ஆழமான காடுகளில் பல கதைகள் உள்ளன, அவற்றில் ஒன்று மாயன் நாகரிகத்தைப் பற்றியது.

உலகின் பழமையான கலாச்சாரங்களில் ஒன்று மாயன் கலாச்சாரம். பண்டைய மாயன் நாகரீகம் என்பது இன்றய மெக்சிகோவின் பெரும்பகுதி, குவாதமாலா மற்றும் பெலிஸ் நாடுகள் முழுவதும் பரவி இருந்தது.

பெலிஸின் இந்த குகை உங்களை பண்டைய மாயாவின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த குகையில் ஆராய்ச்சியாளர்கள் பண்டைய மாயன் நாகரிகத்துக்கு தொடர்புடைய தொல்பொருள் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

பார்டன் க்ரீக் குகை பெலிஸின் கயோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய நிலத்தடி நதி குகை, சாகச ஆர்வலர்கள் படகுகளில் குகையைப் பார்வையிடலாம்.

இந்த குகைக்குள் நீங்கள் செல்லும் போது ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறமுடியும். கடந்த காலத்தில், குகை மாயன் மக்களுக்கு ஒரு புனித தளமாக இருந்திருக்கிறது.

ஆய்வுகளின்படி, மாயாக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தளத்தை பயன்படுத்திருக்கின்றனர். குகைக்குள் மனிதர்கள் பயன்படுத்திய பழங்கால மட்பாண்டங்களின் பல எச்சங்கள் மற்றும் பிரசாதத்திற்காக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பார்டன் க்ரீக் குகை மாயாக்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருந்திருக்க வேண்டும் என்கின்றனர். குகைக்குள் பல கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கலைப்பொருட்களில் சில ஆயுதங்கள், மட்பாண்டங்கள் மற்றும் நகைகளும் இதில் அடங்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?