கசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - நடுங்க வைக்கும் தகவல்கள்! Twitter
உலகம்

கசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் - நடுங்க வைக்கும் தகவல்கள்!

பாதிக்கப்பட்ட பலர் இன்னும் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். 2014ம் ஆண்டு இஸ்ரேல் கசா பகுதியை தாக்கியபோது உயிரிழந்ததை விட அதிக மக்கள் இந்த ஒன்றரை வார தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

Antony Ajay R

இஸ்ரேல் பாலஸ்தீன பகுதியான கசாவில் போரை நடத்தி வருகிறது. நேற்று மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர்.

இது உலக அரங்கில் இஸ்ரேலை கண்டனத்துக்கு உட்படுத்தியிருக்கிறது.

அல்ஜசீரா ஊடகம் இந்த தாக்குதல் குறித்து இதயத்தை பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறது.

மருத்துவ ஊழியர்களும் பொதுமக்களும் வெள்ளைப் பைகளில் அல்லது போர்வைகளில் இறந்தவர்களின் உடல்களை எடுத்து வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் கார்கள் பற்றி எரிந்ததையும் காணமுடிந்தது.

பாதிக்கப்பட்ட பலர் இன்னும் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர் என்று கசாவின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு இஸ்ரேல் கசா பகுதியை தாக்கியபோது உயிரிழந்ததை விட அதிக மக்கள் இந்த ஒன்றரை வார தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மத்திய கிழக்கு வருவதாக தெரிவித்த சில நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் குற்றமாக கருதப்பட்டு வருகிறது. உலக சுகாதார மையம் இஸ்ரேலை கண்டித்துள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற இடங்களியே மக்கள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் மருத்துவமனைத் தாக்குதலுக்கு ஈரான், ஜோர்தான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

இஸ்ரேல் இதனை ஹாமாஸ் இராணுவத்தின் தவறிய தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு அஞ்சி வெளியேற நினைக்கும் பாலஸ்தீனியர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கசாவில் இருந்து வெளியேறும் பாதைகளில் தாக்குதல் நடைபெற்று வருகிறது. எகிப்துக்கு தப்பிச் செல்லும் பாதையையும் அந்த நாடு தடுத்திருக்கிறது.

இதனால் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது கசா. பாலஸ்தீனிய மக்களுள் குழந்தைகள் விகிதம் அதிகம். தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் உணவு, தண்ணீர் பற்றாக்குறைகளில் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?