Whale Twitter
உலகம்

சுற்றுலாப் பயணிகளின் படகை தாக்கிய திமிங்கலம் - எங்கே? | Viral Video

இனி திமிங்கலங்களை காணவரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். திமிங்கிலங்களின் நடத்தை கடந்த சில நாட்களாக மாறி வருவதால் ஹம்பேக் திமிங்கல கூட்டம் தென்பட்டால் படகில் வருவோர் 100 அடி தூரத்தில் இருக்குமாறு கடற்படை போலீசார் தெரிவித்துள்ளனர்

Priyadharshini R

அமெரிக்காவின் மாசூசெட்ஸ் கடலில் உள்ள அரிய வகை ஹம்பேக் திமிங்கிலத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் பலர் அங்கு செல்வார்கள்.

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த ஹம்பேக் திமிங்கிலங்கள் பொதுவாக 60 அடி நீளத்தில் 40 டன் எடையுடன் இருக்கும். இவை சுற்றுலா வரும் பயணிகளின் படகுக்கு அருகே வந்து நீரினை பீய்ச்சி அடித்து வேடிக்கை காட்டுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹம்பேக் திமிங்கிலம் ஒன்று சுற்றுலாப் பயணிகளின் படகினை தாக்கிய காட்சி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாசசூசெட்ஸ் கடற்கரையில் வரிசையாகப் படகுகள் நிற்கிறது. அப்போது பெரிய திமிங்கிலம் ஒன்று 10 அடி உயரத்திற்கு எழும்பி படகின் மீது மோதுகின்றது. இதனால் அந்த படகானது பயங்கரமாக ஆட ஆரம்பித்து, அதன் முன்பகுதி சேதமடைந்தது.

Whale

நல்ல வேளையாகப் படகிலிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இனி திமிங்கலங்களை காணவரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். திமிங்கிலங்களின் நடத்தை கடந்த சில நாட்களாக மாறி வருவதால் ஹம்பேக் திமிங்கல கூட்டம் தென்பட்டால் படகில் வருவோர் 100 அடி தூரத்தில் இருக்குமாறு கடற்படை போலீசார் தெரிவித்துள்ளனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?