செல்ஃபி எடுத்தால் ரூ.24,000 அபராதம்! புதிய விதி அமல்படுத்திய இத்தாலி நகரம் - ஏன்? canva
உலகம்

செல்ஃபி எடுத்தால் ரூ.24,000 அபராதம்! புதிய விதி அமல்படுத்திய இத்தாலி நகரம் - ஏன்?

Keerthanaa R

இத்தாலியின் போர்ட்டொஃபினோ என்கிற நகரத்தில் இனி மக்கள் செல்ஃபி எடுக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி யாரேனும் செல்ஃபி எடுத்தால், 275 யூரோக்கள், அதாவது இந்திய மதிப்பில் 24,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த விதி அந்நகரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவருக்குமே பொருந்துகிறது.

இத்தாலியன் ரிவெயிரா என்ற இடத்தில் அமைந்துள்ளது பொர்ட்டொஃபினோ என்கிற அழகிய கிராமம். வண்ணமயமான கட்டிடங்களும், வித விதமான உணவுகள் கிடைக்கும் ரெஸ்டாரண்ட்களும், பொட்டீக்குகளும் நிறைந்த ஊர் அது.

இத்தாலியின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பொர்ட்டொஃபினோ. இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை காண அங்கு குவியும் சுற்றுலா பயணிகள், அங்கு நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வது வழக்கம்.

ஆனால் இனி அதுபோல செல்ஃபி எடுக்கக்கூடாது என புதிய விதி ஒன்று அமல்படுத்தபட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு “நோ வெயிட்டிங் ஜோன்” போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் அதிக நேரம் கூடுவதை தவிர்க்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மக்கள் இவ்வாறு கூடுவதால் தேவையற்ற போக்குவரத்து நெரிசலும், சில சமயங்களில் சச்சரவுகள் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த புதிய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார் அந்த கிராமத்தின் மேயர்.

தப்பி தவறி இங்கு செல்ஃபி எடுத்துவிட்டால் அபராதமாக ரூ.24,000 வசூலிக்கப்படுகிறது.

ஈஸ்டர் சமயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதியானது, வரும் அக்டோபர் மாதம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் ஒரு விதிவிலக்கும் இருக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் செல்ஃபி எடுத்துகொள்ள எந்தவித தடையும் இல்லை. செல்ஃபி எடுத்தே தீர்வேண்டும் என்றிருப்பவர்களுக்கு இந்த சலுகை உள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?