அரசுக்கு எதிரான கருத்துகளை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹி ஜாமினில் வெளியாகியுள்ளார்.
இவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக உண்ணவிரதம் மேற்கொண்ட இரண்டு நாட்களுக்கு பிறகு இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஜாஃபர் பனாஹி பிரபல ஈரானிய இயக்குநராவார். த்ரீ ஃபேசஸ், நோ பியர்ஸ், டாக்ஸி போன்ற படங்களை இயக்கியவர்.
டாக்ஸி படத்திற்காக 2015 ஆம் ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான கோல்டன் பியர் விருதை இவர் வென்றார்.
த்ரீ ஃபேசஸ் என்ற படத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் இவர் வென்றார்
இவரது படங்கள் பெரும்பாலும் ஈரான் மக்களின் எதிர்கொள்ளும் பிரச்னைகள், குழந்தைகள், பெண்கள், சமூகம் சார்ந்த பிரச்னைகளை மையப்படுத்தி வெளியாவதால், ஈரான் நாட்டில் தடை விதிக்கப்பட்டு கண்டனங்களை சந்திக்கும்.
எனினும் சர்வதேச அளவில் இவரைக் கொண்டாடாதவர்கள் இல்லை.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவர் கைது செய்யப்பட்டார். ஈரானிய அதிகாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்த தனது சக இயக்குநர்களான முகமது ரசூலோஃப் மற்றும் முஸ்தபா அல்-இ அகமது ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதற்காக ஜாஃபர் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், திரைக்கதை எழுதவும், வெளிநாடுகளுக்கு பயணிக்கவும் 20 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஜாஃபர் ஈடுப்பட்டார். இந்த போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு இயக்குநருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இவர் சிறையிலிருந்து வெளியாகும் வீடியோவை இவரது மனைவி இணையத்தில் பகிர்ந்திருந்தார். இயக்குநர் ஜாஃபர் சிறையிலிருந்து வெளியானதற்கு பல முக்கிய இயக்குநர்கள், பிரபலங்கள் ஆதரவளித்துள்ளனர்.
மேலும், ஈரானிய மக்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ஆதரிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust