ஜமீலா ஜமில் Twitter
உலகம்

எலான் மஸ்க் வாங்குவதைத் தொடர்ந்து ட்விட்டரிலிருந்து வெளியேறிய நடிகை - காரணம் என்ன?

NewsSense Editorial Team

வெகு விரைவில் உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க் ட்விட்டரை சொந்தமாக்கிக் கொள்ளவிருக்கிறார். ட்விட்டர் இயக்குநர் குழுவும், எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கும் திட்டத்தை அங்கீகரித்து ஆமோதித்துள்ளது.

எலான் மஸ்கின் கையில் ட்விட்டர் சிக்கினால் மோசமான விளைவுகளை அத்தளம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என ஒரு தரப்பும், அப்படி எல்லாம் இல்லை, இனிதான் ட்விட்டர் தன் வரலாற்றில் புதிய உச்சங்களைத் தொட உள்ளது என மற்றொரு தரப்பும் இணையத்தில் விவாதித்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் எலான் மஸ்கை எதிர்ப்பவர்கள் மற்றும் அவர் ட்விட்டரின் தன்மையையே மாற்றி சின்னாபின்னமாக்கிவிடுவார் என அஞ்சுவோர் பலரும் ட்விட்டர் தளத்தை விட்டு வெளியேறுவதையும், அதற்கு அவர்கள் கூறும் காரணத்தையும் ட்விட்டரிலேயே பார்க்க முடிகிறது.

வெகுஜன மக்கள், சாதாரண ட்விட்டர் பயனர்களைக் கடந்து, பிரபல நடிகை ஜமீலா ஜமீல் ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க்

"மஸ்க் வாங்கினால் ட்விட்டரில் இருக்க மாட்டேன்"

எலான் மஸ்க் ட்விட்டரையும் கைப்பற்றிவிட்டார். இது என் கடைசி ட்விட் பதிவாக இருக்குமெனக் கருதுகிறேன். கருத்துச் சுதந்திரம் குறித்து பேசி ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க், ட்விட்டர் தளத்தைச் சட்டங்களுக்கு உட்படாத, வெறுப்பு, பாரபட்சம் நிறைந்த தளமாக மாற்றிவிடுவாரோ என அச்சப்படுகிறேன் என பொருள்படும் தொனில் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜமீலா ஜமீல் ஸ்டார் டிரக் - ப்ராடிஜி, ஷீ ஹல்க் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள், how to build a girl, Marry me போன்ற முழு நீளப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்குவது தொடர்பாக பேச்சு எழுந்த போதே, மஸ்க் ட்விட்டரை வாங்கினால் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துவது குறித்துப் பேசி வந்தார் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது

எலான் மஸ்க் வெளிப்படை தன்மை உடையவர் அல்ல

"எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதில் ஒரு நல்லது என்னவென்றால், நான் ட்விட்டர் தளத்தில் சமூகத்துக்குத் தொல்லையாக இருக்காமல், இத்தளத்தை விட்டு வெளியேறுவேன். எனவே எப்படிப் பார்த்தாலும் எனக்கு வெற்றி தான்" எனக் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி தன் ட்விட்டர் கணக்கிலேயே பதிவிட்டுள்ளார் ஜமீலா ஜமீல்.

கருத்துச் சுதந்திரம் சார்ந்த விஷயங்களில், எலான் மஸ்க் அத்தனை வெளிப்படையான நபர் கிடையாது என்றும், தன்னை எதிர்த்து கருத்து கூறுபவர்களை அரவணைத்துச் செல்லக் கூடிய தன்மையோ, அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவரோ அல்ல என பலரும் பல தளங்களில் புகார் கூறியதையும் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

எலான் மஸ்க் முழுமையாக ட்விட்டரின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின், என்ன மாற்றங்கள் எல்லாம் வரப் போகிறதெனப் பார்க்க ஒரு பெருங்கூட்டம் காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?