ஜப்பான்: ஆண்குறி பொம்மைகள் வைத்து வினோத திருவிழா கொண்டாடும் மக்கள் - என்ன காரணம்? ட்விட்டர்
உலகம்

ஜப்பான்: ஆண்குறி பொம்மைகள் வைத்து வினோத திருவிழா கொண்டாடும் மக்கள் - என்ன காரணம்?

இந்த நிகழ்வின்போது ஆண்களும் பெண்களும் கைகளில் பிரம்மாண்டமான ஆணுறுப்பு பொம்மைகளை சுமந்து செல்கின்றனர். இந்த திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

Keerthanaa R

ஜப்பான் நாட்டில் மிகவும் வித்தியாசமாக ஆண்குறி திருவிழா கொண்டாடப்படுகிறது.

உலகெங்கிலும் நாம் நினைத்துப் பார்க்காத விஷயங்களுக்கு கொண்டாட்டங்களும், வழிபாடுகளும், சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. இவற்றிற்கு பின்னால் அறிவியல் சார்ந்தும், மத நம்பிக்கைகள் சார்ந்தும் காரணங்களும் இருக்கின்றன.

அப்படி ஒரு வினோதமான திருவிழா தான் இந்த கணாமாரா மட்சூரி பண்டிகை. ஜப்பானில் பல ஆண்டுகளாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு மகிழ்கின்றனர்.

கணாமாரா மட்சூரி என்பது என்ன?

கணாமாரா மட்சூரி என்பது ஆண்குறி திருவிழா. ஜப்பானின் கவாசாகி பகுதி மக்கள் தான் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்த நிகழ்வின்போது ஆண்களும் பெண்களும் கைகளில் பிரம்மாண்டமான ஆணுறுப்பு பொம்மைகளை சுமந்து செல்கின்றனர். இந்த திருவிழாவை காண பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இந்த திருவிழா நடக்கிறது.

இந்த ஊர்வலத்தின்போது மக்கள் மூன்று விதமான ஆண்குறி பொம்மைகளை ஏந்திச் செல்கின்றனர்.

ஒன்று கருப்பு நிறத்தில் இரும்பால் ஆன பொம்மை, ஒன்று மரத்தினால் ஆனது மற்றொன்று பின்க் நிற பொம்மை

இந்த திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது?

1969ஆம் ஆண்டு முதல் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் பாலியல் ரீதியான நோய்கள் அதிகம் பரவியதாக கூறப்படுகிறது.

அப்போது பலரும் அங்குள்ள கணாயாமா கோவிலில் தஞ்சம் புகுந்தனர். 7ஆம் நூற்றண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் வழிபாடு செய்த பின்னர் நிலை சரியானதாக கூறப்படுகிறது.

அன்று முதல் திருவிழாவும் கொண்டாட தொடங்கினர்.

காலத்திற்கு ஏற்ப பாலியல் ரீதியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.

இந்த திருவிழா பின்பற்றப்பட இன்னும் சில கதைகளும் காரணங்களும் கூறப்படுகின்றன.

இந்த நிகழ்வின்போது ஆணுறுப்பு வடிவத்தில் லாலி பாப்கள், ஐஸ் க்ரீம்கள் விற்கப்படுகிறது. கலந்துகொள்ளும் மக்களும் ஆணுறுப்பு வேடமணிந்து ஊர்வலமாக செல்கின்றனர்.

2012 வரை இந்த நிகழ்வுகள் பெரிதாக பிரபலமடையவில்லை. அதன் பிறகு ஒரு பெண் பத்திரிகையாளர் இந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு வெளியில் பேசுபொருளானது.

இப்போது குறைந்தது இந்த விழாவுக்கு 50,000 பேர் வரை வருகை தருவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?