beer
beer Twitter
உலகம்

இளைஞர்களை மது அருந்த ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு - என்ன காரணம்?

Keerthanaa R

இளைஞர்களை மது அருந்த ஊக்குவிக்கும் விதமாக ஜப்பான் அரசு புதிய பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.

கடந்த 2019 இறுதி, 2020இன் துவக்கம் முதல் இரண்டு வருடங்களாக உலகையே கட்டிப்போட்டது கொரோனா பெருந்தொற்று. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வேலை வாழ்வாதாரம் இழந்து, மக்கள் அவதிப்பட்டனர். இதனால், நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியும் கண்டது. அந்த நாடுகளில் ஜப்பானும் அடங்கும்.

இரண்டு வருட ஊரடங்கு காரணமாக அரசுக்கு மதுபானம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துவிட்டது என்று, அந்நாட்டு தேசிய வரி முகமை தரவுகளை வெளியிட்டுள்ளது. 2020ல் ஜப்பானில் மக்கள் குறைந்தளவு மதுபானமே அருந்தியுள்ளனர் என தரவுகள் கூறுகின்றன. அதாவது 75லிட்டர். இது 1995ஆம் ஆண்டு மக்கள் அருந்திய 100 லிட்டர் அளவை விடக் குறைவு.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் மக்கள் தொகையும் ஜப்பானில் குறைந்திருக்கிறது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்கும் திட்டங்களையும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்களையும் ஜப்பான் அரசு வகுத்துள்ளது. அந்த வகையில், இளைஞர்களை மது அருந்த ஊக்குவிக்கும் விதமாக பிரச்சாரத்தை துவங்கியுள்ளது

சேக் விவா என்ற இந்த பிரச்சாரத்தை ஜப்பான் துவங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி மதுபானத்தின் தேவையை இளைஞர்களிடம் எப்படி தூண்டுவது போன்ற விளம்பர முறைகள், தயாரிப்புகள், வடிவமைப்புகள், புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது போன்ற ஐடியா வழங்க போட்டி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு செப்டம்பர் 9 வரை யோசனைகள் வழங்கலாம். பெறப்படும் யோசனைகளை அக்டோபர் மாதம் கூடும் நிபுணர் குழு மேம்படுத்தும். பின்னர் நவம்பர் மாதத்தில் இதன் இறுதிப்போட்டி நடைபெறும் எனவும், இறுதிகட்ட அறிக்கையை அரசுக்கு தேசிய வரி முகமை போட்டி முடிந்தவுடன் சமர்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியாளர்களின் திட்டம் வணிகமயமாக்கப்படுவதற்கான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?