Japanese techniques to help stop overthinking  Canva
உலகம்

அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க ஜப்பானியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

21ஆம் நூற்றாண்டில் மன நிம்மதியுடன் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. மனிதர்களாகிய அனைவரும் இதனை எதிர்கொண்டிருப்போம். அதிகமாக சிந்திப்பதை நிறுத்த ஜப்பானியர்கள் கையாளும் நுட்பங்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Priyadharshini R

21ஆம் நூற்றாண்டில் மன நிம்மதியுடன் வாழ்வது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. அதனுடன் அதிக சிந்தனை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் நிரந்தர நண்பர்களாகி விடுகின்றன.

மனிதர்களாகிய அனைவரும் இதனை எதிர்கொண்டிருப்போம். அதிகமாக சிந்திப்பதை நிறுத்த ஜப்பானியர்கள் கையாளும் நுட்பங்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இகிகை

இகிகை என்பது 'வாழ்க்கையின் நோக்கம்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இகிகையின் கூற்றுப்படி, வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் மன நிறைவு தருவது எது என்பதை அடையாளம் காண்பது முக்கியம். பின்னர் மக்கள் தங்கள் ஆற்றலை அந்த அர்த்தமுள்ள செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். இதனை பின்பற்றும் போது தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கலாம்.

கைசென்

கைசென் என்பது 'தொடர்ச்சியான முன்னேற்றம்' என்று பொருள்படும். அவர்களின் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் சிந்தனை முறைகளில் மாற்றங்களைச் செய்ய மக்கள் முயற்சிக்கின்றனர்.

ஹரா ஹச்சி பு

அதிகப்படியான உணவு மற்றும் சோம்பலை குணப்படுத்துவதற்கான சரியான வழிமுறை ஹரா ஹச்சி பு. ஒரு நபர் 80% மட்டுமே கவனத்துடன் சாப்பிடுவதைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று அது கூறுகிறது.

கவர்ச்சிகரமான விஷயங்களை நோக்கி ஓடுவதை விட, சின்ன சின்ன அழகை அனுபவிக்க, ரசிக்க மக்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் வாழ்க்கையின் குறைபாடுகளை அவர்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?