Japan’s latest Mipig Cafe lets customers cuddle and spend time with pigs Twitter
உலகம்

பன்றிகளுடன் செல்ஃபி எடுக்க குவியும் மக்கள் - ஜப்பானின் Mipig கஃபே பற்றி தெரியுமா?

Priyadharshini R

தற்போது இருக்கும் ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு யுத்திகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் செல்லப்பிராணிகளை கஃபேக்குள் பராமரித்து, வாடிக்கையாளர்கள் அவைகளுடன் விளையாட அனுமதிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் எத்தனையோ ஹோட்டல்களில் நாய், பூனைகளுடன் விளையாட வாடிக்கையாளரை அனுமதிக்கின்றனர்.

இது பொதுவாக நாம் கேள்விப்பட்ட ஒன்றுதான்! ஆனால் ஜப்பானில் உள்ள ஒரு கஃபேயில் சிறிய பன்றிகளுடன் விளையாட, செல்ஃபி எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இந்த ஹோட்டலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். பன்றிகள் என்றாலே அதன் மீது வாசனை வரும் என்ற கருத்திற்கு மாறாக அந்த ஹோட்டலில் இருக்கும் பன்றிகள் சுத்தமாகவும், வாசனையற்றதாகவும் இருக்கின்றன.

30 நிமிடங்களுக்கு அந்த சிறிய பன்றிகளுடன் வாடிக்கையாளர்கள் விளையாட 2,200 யென் செலுத்த வேண்டி இருக்கும்.

Mipig என்ற நிறுவனம், சிறிய அளவிலான பன்றிகளை உருவாக்குகின்றன. இந்த கஃபேயில் பன்றி உணவையும் விற்பனைக்கு வழங்குகிறது.

சமூக வலைதளங்களில் இந்த கஃபே குறித்த வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

எனவே கஃபே எந்த விளம்பரமும் இல்லாமல் பல்வேறு சர்வதேச பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

இத்தகைய கஃபேக்களில் விலங்குகளின் நெறிமுறை சிகிச்சை குறித்து சிலர் கவலை தெரிவிக்கையில், மற்றவர்கள் மனித நலனில் விலங்குகளின் தொடர்பு எவ்வளவு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என சுட்டிக்காட்டுகின்றனர்.

மனிதர்கள் விலங்குகளுடன் தொடர்புகொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், தலைவலியைக் குறைக்கும் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?