Jarada Island: Why this vanishing island is every traveller's paradise? Twitter
உலகம்

Jarada Island: இந்த தீவு ஏன் சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக உள்ளது?

Priyadharshini R

இந்த உலகம் அழகான அதிசயங்களால் நிரம்பியுள்ளது. அப்படி அழகு மிகுந்த ஜரதா தீவு குறித்து தான் பார்க்க போகிறோம்.

தீவு நாடான பஹ்ரைனில் இருந்து ஒரு மணி நேர படகு சவாரியில் அமைந்துள்ள இந்த இயற்கை அதிசயம் சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கமாக உள்ளது.

பாரசீக வளைகுடாவின் கடல் அலைகளுக்கு எதிராக ஸ்பீட் படகில் ஏறி, லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்துக்கொண்டு, மதி மயக்கும் பஹ்ரைன் வானலையை ரசித்துக் கொண்டே உங்கள் சாகசத்தைத் தொடங்குங்கள்.

அப்படி போகும் போது கடலின் நீல நிறத்தில் இருந்து வெள்ளை கோபுரம் போன்ற காட்சியளிக்கும் தங்க மணலின் ஒரு சிறிய பகுதியை நீங்கள் கவனிப்பீர்கள், அதுதான் ஜரதா தீவு!

கரையோரத்தில் நீங்கள் உலா வரும்போது உங்கள் கால்களுக்குக் கீழே சூரியன் முத்தமிட்ட மணலின் வெப்பத்தை உணருவீர்கள்.

தெளிவான நீரில் குளிக்கலாம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் பன்முகத்தன்மையைக் கண்டு வியக்கலாம் அல்லது கடற்கரை நாற்காலியில் நிதானமாக ஓய்வெடுத்து, சுற்றியுள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.

பஹ்ரைன் அதன் முத்து வரலாற்றிற்கு பெயர் பெற்றது. வளைகுடாவின் அரவணைப்பில் அமைந்துள்ள ஜரதா தீவின் கரையோரத்தில், விலைமதிப்பற்ற முத்துக்களை மறைத்து வைக்கும் சிப்பிகள் இருப்பதாக கூறப்படுகிறது. நீங்கள் வீட்டிற்கு திரும்பும் போது உங்களுக்கும் அது கிடைக்கலாம்.

இந்த சொர்க்கத்திற்கான பயண செலவு சற்று விலை உயர்ந்ததாக இருக்கலாம், ஏனெனில் தீவில் குறைந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தட்பவெப்ப நிலை சாதகமாக இருக்கும் போதும், குறைந்த அலைகளின் போது மட்டுமே தீவை பார்வையிட முடியும் என்பதால், ஒவ்வொரு பயணிக்கும் இந்த இடம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த தீவு சுற்றுலாப் பயணிகளிடையே மட்டுமல்ல, உள்ளூர் மக்களிடையேயும் பிரபலமாக உள்ளது. இங்கு அமைதியும் வசீகரமும் இணையற்றதாகவே உள்ளது. இந்த தீவுக்கு பயணத்தைத் திட்டமிடுங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?