Jealous girlfriend sets boyfriend's house on fire after another woman answers his phone  Twitter
உலகம்

காதலன் ஃபோனில் பெண் குரல் : கோபத்தில் வீட்டை கொளுத்திய காதலி - என்ன நடந்தது?

வீட்டிற்கு தீவைத்த பின்பு அவனது வீட்டை விட்டு வெளியேறும் போது "உன் வீடு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று மெசேஜ் செய்திருக்கிறார் மேரி.

Priyadharshini R

காதலனின் தொலைபேசி அழைப்புக்கு வேறொரு பெண் பதிலளித்ததால் அவரது வீட்டை தீவைத்து கொளுத்தியுள்ளார் காதலி.

டெக்சாஸைச் சேர்ந்த 23 வயதான செனாய்டா மேரி சோட்டோ, தனது காதலன் ஏமாற்றுவதாக நினைத்து, அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

காதலனுக்கு ஃபோன் செய்துள்ளார் மேரி. அந்த அழைப்பை வேறு ஒரு பெண் எடுத்து பேசியுள்ளார்.

இதனால் தன் காதலன் மீது சந்தேகமடைந்த மேரி, பொறாமைப்பட்டு ஒரு விபரீத முடிவை எடுத்தார்.

அவரின் வீட்டுக்கு சென்று அங்குள்ள படுக்கைக்கு தீ வைத்தார்.

போலீசார் கூறுகையில், படுக்கையில் தீ பரவியதால், வீடு மொத்தமும் எரிந்துள்ளது. மேலும் $75,000 (£62,327.25) மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது என்றனர்.

மேலும் வீட்டிற்கு தீவைத்த பின்பு அவனது வீட்டை விட்டு வெளியேறும் போது "உன் வீடு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று மெசேஜ் செய்திருக்கிறார் மேரி.

விசாரணையில் அந்த தொலைபேசி அழைப்பை காதலனின் உறவினர் பெண் அட்டெண்ட் செய்து பேசியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காதலன் கொடுத்த புகாரின் பேரில் மேரி கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?