அய்மன் அல்-ஜவாஹிரி Twitter
உலகம்

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் - ஜோ பைடன் அறிவிப்பு

Priyadharshini R

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குக் காரணமாக இருந்த அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

உலகளவில் பல்வேறு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்காவின் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதன்பின் இந்த அமைப்பின் தீவிரவாத செயல்பாடுகள் சற்று குறைந்திருந்த வேளையில் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியது.

அதனால் இந்த அமைப்பின் தீவிரவாத தன்மையை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் உறுதிப்படாமல் இருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், "அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்" என தெரிவித்திருக்கிறார்.

Joe Biden

மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அமைப்பு, எங்கு இருந்தாலும், எவ்வளவு காலங்கள் ஆனாலும் அதனை கண்டுபிடித்து அமெரிக்கா தண்டிக்கும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்பில் இருந்த அய்மான் அல்-ஜவாரியை அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?